முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் அரசியலை அமைச்சர் அதாவுல்லா நிறுத்த வேண்டும்
(எம்.பைஷல் இஸ்மாயில்)
தமிழ்ப் பத்திரிகை ஒன்றில்; அண்மையில் 'முஸ்லிம்கள் எப்போதும் அரசுக்கு எதிராகவே வாக்களிக்கின்றனர்' என்ற தலைப்பிட்டு அமைச்சர் அதாவுல்லா பொத்துவிலில் கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தி தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
ஆட்சிக்கு எந்த அரசு வருகிறதோ அதற்கு எதிராகவேதான் முஸ்லிம்கள் வாக்களித்து வருகின்றார்கள் எனவும், தற்போதிருக்கின்ற ஜனாதிபதிக்கு முஸ்லிம்களில் கணிசமானவர் வாக்களிக்கவில்லை எனவும், முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் மாத்திரமே செய்துவருகின்றது எனவும், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டுமென்ற தேவை முஸ்லிம் காங்கிரஸூக்குத்தான் உள்ளது எனவும் தன்னுடைய மக்களை அரசியல் மயப்படுத்தும் நோக்கத்துடன் தலைவர் அஸ்ரப் ஆரம்ப காலத்தில் இனவாதம் பேசினாலும் கூட கடைசியில், தனது இனத்திற்கு மாத்திரம் பேசி எதனையும் வெல்ல முடியாது என்பதைப் புரிந்துகொண்டு பொதுவான 'நுஆ' என்ற கட்சியை ஆரம்பித்துவைத்தார் என்றெல்லாம் கருத்துக்களைத் தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இங்கு, அமைச்சர் அதாவுல்லா முஸ்லிம்களை அரசுக்கெதிரானவர்களாகவும் பெரும்பான்மை விருப்பத்திற்கு எதிரானவர்களாகவும் காட்டமுனைந்துள்ளதுடன், முஸ்லிம்களின் தனித்துவக் குரலான முஸ்லிம் காங்கிரஸையும் அதனுடைய ஸ்தாபகத் தலைவரான மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் காலப்பொருத்தம் கருதி தான் முன்னெடுத்து வந்த அரசியல் நிலைப்பாடுகளையும் தன்னிடமுள்ள அரசியலறிவை(?) வைத்துக் கொண்டு பிழையான முறையில் சித்தரிக்க முனைந்துள்ளமை புலனாகிறது.
இவ்வாறான முறையற்ற காலங்கடந்த, அவதூறான பேச்சுக்களை பரப்புவதன் மூலம் முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கும் செயலை செய்துவருகின்ற அரசியலை அமைச்சர் அதாவுல்லா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டியதுடன் இதன் பின்னராவது தன்னை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஒரு ஜனனாயக நாட்டில் தான் விரும்புகின்ற ஆட்சியாளருடன் அல்லது கட்சியுடன் சேர்ந்து காலப்பொருத்தப்பாடு மற்றும் தனது சமூகம்சார் நலன் கருதி ஆட்சியமைப்பது என்பதும் அரசிற்கு ஒத்துழைப்பது என்பதும் ஒரு கட்சியின் அல்லது ஒரு சமூகத்தின் ஜனனாயக உரிமையாகும். அந்தவகையில்தான் பெரும்பான்மை இனத்தவர்கள் கூட தங்களது ஆட்சித்தெரிவினை காலத்திற்கு காலம் மாறுபட்ட வகையில் மேற்கொள்கின்றார்கள். அதனால்தான் வேறு கட்சிகள், தலைமைகள் நாட்டின் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றன. இதுதான் வரலாறாகும் மாத்திரமன்றி யதார்த்தமும் அதுதான்.
அதேபோன்றுதான் முஸ்லிம்களும் கடந்த காலங்களில் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருந்ததனை அவதானிக்க முடியும். சிங்கள மக்களின் பெரும்பான்மை விருப்பை முழுமையாக மறுதலிக்கும் வகையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் தங்களது அரசியல் தீர்மானங்களை எடுக்கவில்லை என்ற வரலாற்றையும் அமைச்சர் அதாவுல்லா மீளப்பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களும் முஸ்லிம் காங்கிரஸூம் எடுத்த நிலைப்பாட்டினை குறிப்பிட முடியும்.
எனவே, ஆட்சிக்கு எந்த அரசு வருகிறதோ அதற்கு எதிராகத்தான் முஸ்லிம்கள் வாக்களித்து வருகின்றார்கள் என்ற அமைச்சரின் கூற்று தவறானதும் கண்டிக்கப்படவேண்டியதுமாகும்.
தற்போதிருக்கின்ற ஜனாதிபதிக்கு முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ள கருத்தின் மூலம் அமைச்சர் எடுத்துக்காட்ட முனைவது எதனை என ஆராயவேண்டியுள்ளது. தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாத சக்திகளினால் முன்னெடுக்கப்படுகின்ற நாசகார சதிகளை நாட்டின் தலைவரான ஜனாதிபதி தடுக்காமல் இருப்பதனை நியாயப்படுத்த முனைகிறாரா..? அல்லது தான் ஜனாதிபதிக்கு வாக்களிக்கக் கோரியும் வாக்களிக்காத மக்களுக்காக தான் எந்த வகையிலும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்ற அடிப்படையில் 'ஊர் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன்' போன்று தான் தொலைக்காட்சிகளில் பாடல்கள் பாடி ஆடுவதை நியாயப்படுத்த முனைகிறாரா..?
மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டு வர முயற்சித்ததன் மூலம் தனது காட்டிக்கொடுப்புப் படலத்தின் உச்சத்திற்கே சென்று ஒரு பாரிய சமூகத் துரோகத்தை மிக அநாயாசமாக எவ்வித குற்ற உணர்வும் இன்றி செய்ய முனைந்திருப்பதனை நமது சமூகம் ஒருபோதும் மன்னிக்க முடியாது.
ஏனெனில், ஒரு ஜனனாயக நாட்டில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர் நூறு வீதம் மக்களின் விருப்பத் தெரிவினைப் பெற ஒருபோதும் முடியாது. இங்கு கணிசமானவர்கள் எதிர்த்தும் வாக்களிப்பர். பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தனக்கு எதிர்த்து வாக்களித்த மக்களுக்கெதிராக செயற்படுவதில்லை. அப்படியான வரலாறு சிறந்த ஆட்சியில் இல்லை என்ற ஜனனாயகக் கொள்கையை அமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதுமாத்திரமன்றி, தற்போதைய ஜனாதிபதி எடுத்து வருகின்ற அரசியல் சார் நடவடிக்கைகளிலும் நாட்டு நலன்சார்ந்த விடயங்களிலும் எமது நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்காக பேசுகின்ற தனித்துவக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுள்ள நிலைப்பாடுகள் முற்றாக அவரது நடவடிக்கைகளை நிராகரித்த அடிப்படையில் அமையவில்லை. மாறாக தனது இனத்தினதும் சிறுபான்மை சமூகத்தினதும் நலன்கள் பாதிக்கப்படுகின்ற விதத்தில் தீர்மானங்கள் அரசினால் மேற்கொள்ளப்படும் போதே, அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வருகின்றது. இது அக்கட்சியின் முஸ்லிம் சமூகம் சார்ந்த தார்மீகக் கடமையாகும் என்பதை அமைச்சர் அதாவுல்லா புரிய வேண்டும்.
மாறாக, தனது இனத்தின் அரசியல் விடியலுக்காக முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்தி, எழுச்சிப்பாதையை நோக்கி சென்ற அதேவேளையில் ஏனைய சமூகத்தவர்களையும் அந்தப்பாதையில் இணைப்பதற்காகவும் தேசத்தை விடியலை நோக்கி நகர்த்தவும்தான் 'நுஆ'வை அமைத்தார் என்ற உண்மையையும் அமைச்சர் அதாவுல்லா புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே தயவு செய்து முஸ்லிம் காங்கிரஸின் பாசறையில் அரசியல் கற்றுக் கொண்டவரும் தனக்கான அரசியல் அடையாளத்தைப் பெற்றவருமான அமைச்சர் அதாவுல்லா, இனிமேலாவது தான் அரசாங்கத்திடத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக முஸ்லிம்களைக் காட்டிக்கொடுக்கும் அரசியலை செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மௌலவி முபாறக் அப்துல் மஜீதைப் போன்று தனக்கென ஒரு தனித்துவமான அரசியல் கொள்கை இல்லாததனால் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தற்போதைய தலைமையையும் விமர்சிப்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளதையும், அவைகளின் மீது அவதூறுகளையும் பொய்யையும் சுமத்துவதையும் இடைநிறுத்திக் கொள்ள வேண்டும் என இறுதியாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
gowrawa p.c.uruppinar awarhale!
ReplyDeleteamaichar athaullah awarhalin arikkaikku marupparikkai koori irukkireerhall. ungal marupparikkai eppothu yokkiyathai ullathaha irukkumendraal,
THALAIVARIN KANNASAIVUKKU etpa sirupaanmayinarin urimaiyil mannallippodum THIVINEKUMAIKKU kai uyarthaamal irunthirunthaal...
thayavuseithu inimel URIMAI ARASIYAL pesuwathatkumun THIVINEKUMAYAI oru kanam manakkannil konduvanthu vittu.............
மாகாண சபை உறுப்பினர் அவர்களே அமைச்சர் அதாஉல்லா அவர்கள் கூறிய கருத்து பிழை என்றால் கிழக்க மாகாண சபையை தழிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து நீங்கள் ஆட்சியை செய்திருக்கலாமே? உங்களால் அதனை ஏன் செய்ய முடியவில்லை அமைச்சர் பெசில் தந்த ஒரு கோடி ரூபாய் பணத்துடன் அரச பக்கம் இருந்தவர்கள்தானே நீங்கள் அப்படியென்றால் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் சொல்வதில் என்ன தவறு உள்ளது முஸ்லிம் மக்கள் மஹிந்த பக்கம்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காட்டிக்கொடுக்குமஅரசியல் செய்யும் வரை மகன் மஹிந்தவை சீண்டவே முடியாது வெட்கமற்ற கதைகளை விட்டு சாத்தியமான, காலத்துக்கு ஏற்ற கதைகளை பேசுங்கள்
ReplyDeleteமாகாணசபை உறுப்பினர் நசிர் ஒரு கோடி வாங்கிய செய்தி இந்த வருடத்தின் முதலாம் பரிசி பெற்ற நகச்சபைத் தம்பி. நேற்று அரசியலுக்கு வந்த நசீருக்கு ஒரு கோடி என்றால் அதாஉல்லாவுக்கு.....!
ReplyDeleteஇப்படியுமா ஜனு... அதாஉல்லாவுக்கு வக்காளத்து வாங்குவது. உண்மையைச் சொல்லுகின்ற நஸிருக்கு இப்படியுமா? எழுத நோன்பு காலம் மிக கஷ்ட்டப்பட்டுள்ளிர்கள்.
அதா ஒரு சிறந்த அக்கரைபற்றுக் குடி-? பைலா பாடகர் என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் சிறந்த அரசியல் வாதி என்று சொல்லாதீர்கள்.
கோடிக்டகுச் சொந்தக்காரன் அதா வாழ்க....! அதற்கு உரமுட்டும் நீங்களும் வளர்க...!