இலங்கை, மாலைதீவு, இந்தியா நாடுகளுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம்
இந்தியா, சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான இரண்டாவது மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.
சிறிலங்கா தரப்புக்கு பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவும், இந்தியத்தரப்புக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும், மாலைதீவு தரப்புக்கு, பாதுகாப்பு அமைச்சர் மொகமட் நசீமும் தலைமை தாங்கினர்.
இந்த மாநாட்டில் குறிப்பாக கடல்சார் ஒத்துழைப்புத் தொடர்பான பேச்சுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக எட்டப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து இது தொடர்பான முத்தரப்பு உடன்பாடும் கைழுத்திடப்பட்டுள்ளது.
Post a Comment