பிலிப்பைன்ஸில் முஸ்லிம் ஆசிரியைகள் வகுப்பறைக்குள் புர்காவை அகற்ற உத்தரவு
பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடசாலை அறைக்குள் தனது ஹிஜாப் முகத்திரையை அகற்றிக் கொள்ளும்படி கோரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் சிறந்த உறவை பேணவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் மதங் கள் தொடர்பில் நலினப் போக்கை ஏற்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என கல்வித்துறை செயலா ளர் அர்மின் லுயிஸ்ட்ரோ கூறியுள்ளார். எனினும் முஸ்லிம் மாணவிகள் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முகத்திரை அல்லது ஹிஜாபை அணிவது அனுமதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஆசிரியைகள் பாடசாலை அறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் போது மாத்திரம் முகத்திரையை அகற்றிக்கொள்வது மாணவர்கள் கற்க மேலும் உதவும் என பிலிப்பைன்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்வித் திணைக்களத்தின் இந்த முடிவை ஏற்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்கான அரச அலுவலகம் அறிவித்துள்ளது. Tn
They should remove their face cover when they teach. If students cannot see the teachers' facial expression how can they learn?
ReplyDelete