Header Ads



முஸ்லிம் வர்த்தகர் படுகொலை - வாஸ் குணவர்தனவின் மகன் கைது

பம்பலப்பிட்டிய, கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரின் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் அத்தியட்சர் சானி அதனடிப்படையில் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிந்துவுக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடுவெல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ரவீந்து குணவர்தன இருந்த போதே பொலிஸார் கைது செய்துள்ளனர். vi

No comments

Powered by Blogger.