Header Ads



பொது பலசேனாவுடன் என்னை சிண்டு முடியத் தேவையில்லை - கல்முனை சுபத்ராராமய விகாராதிபதியும்

(ஏ.எல்.ஜுனைதீன்)

     நான் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவன். பெளத்த சமயத்தைப் பேண வேண்டிய தேவை எனக்குள்ளது.அதற்காக ஏனைய சமயங்களை தூசிக்க வேண்டிய தேவை எனக்கு மட்டுமல்ல யாருக்குமில்லை. அவரவர் சமயம் அவரவர்க்கு பெரியது. அதில் தலையிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. என கல்முனை சுபத்ராராமய விகாராதிபதியும் சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் உப தலைவருமான வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சாய்ந்தமருதில் நடைபெற்ற பேரவையின் உயர்பீடக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.

    சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் எம்.ஐ எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இவ் உயர்பீடக் கூட்டத்தில் வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,

    இந்த நாடு ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கு பிறந்த அனைவருக்கும் இந்நாடு சொந்தமானது. ஆனதால் யாரும் இனவாதம், மதவாதம் பேசி நாட்டைப் பிரித்து சமாதான சூழலைக் குழப்ப முன் வரக்கூடாது. ஹலால் விடயம் முஸ்லிம்களைச் சார்ந்தது. அதைப் பற்றி நானோ தமிழர்களோ அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இது எமக்கு வேண்டாம். அதற்காக அது சரி, இது பிழை என்று கூற நான் முற்படவில்லை. அந்த தேவையுமில்லை.

    உயிர்களைக் கொல்ல வேண்டாம் என சமயங்கள் கூறுகின்றன. ஆகவே மாட்டை அறு என நான் கூறமாட்டேன். மாட்டை அறுப்பதோ உண்பதோ அது அவர்களது சமாச்சாரம். அதில் நான் தலையிடவில்லை அந்த தேவையும் எனக்கு இல்லை. பல்லின சமூகத்தின் மத்தியில் வாழும் நாம் சில சில விட்டுக் கொடுப்புகளுடனும், சகிப்புத் தன்மையுடனும்  வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

    நான் பெளத்த மத துறவி. அந்த மதத்தைப் பின் பற்ற வேண்டும். அதற்காக ஏனைய மதங்களை புண்படுத்த வேண்டிய அவசியம் யாருக்குமில்லை. பொது பலசேனா பெளத்தத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டவர்கள் எனக் கூறுகின்றனர். அதில் நன்மை, தீமை இருக்கும். எனவே, பொது பலசேனாவுடன் என்னை சிண்டு முடியத் தேவையில்லை. நான் எல்லா சமூகத்தவர்களுடனும் எல்லா சமயத்தவர்களுடனும் சமாதானமாக வாழ விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

4 comments:

  1. பொதுபலசேன பெளத்தத்தை பாதுகாக்கப்புறப்பட்டவர்கள் என்பது தவறான கூற்று. மற்றப்படி ஹலால் முஸ்லிம்கள் விடயம் என்பதுவும் அதிலும் மாடறுப்பது அவரவர் விருப்பம் என்பதுவும் விட்டுக்கொடுக்கும் மன்ப்பான்மையாகவிருப்பதுவும் சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டுமென்பதற்கும் ஒரு உதாரணமாகவும் உள்ளது.

    எது எவ்வாறாயினும் நம்முடன் பெளத்தர்களை இன்னும் இன்னும் நல்லெண்ணங்களை வளர்ப்பதன்மூலமே நமது இலக்குகளை அடைய முடியும் என்பதால் நாம் ஒரு போதும் பெளதர்களின் எதிர்ப்பை நம்முடன் நல்லெண்ணமுள்ளவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கவேண்டியதில்லை. பெளதர்கள் நமக்கெதிராக செய்யும் தவறுகளை அவர்களை வைத்துத்தான் நம்மால் கேட்க முடியுமே தவிர நாம் முன்னின்று கேட்கும்போது பிரச்சினைகள் அதிகரிக்கவாய்புள்ளது.....

    ReplyDelete
  2. pls tell this story to bbs

    ReplyDelete
  3. It is good to hear, but in practice?

    ReplyDelete
  4. it is good to hear but in practical ?

    ReplyDelete

Powered by Blogger.