பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக காத்தான்குடியில் கண்டனத் தீர்மானம்
(Vi) முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றுவரும் புனித பள்ளிவாயல்கள், முஸ்லிம்கள் மீது பௌத்த தீவிர வாதிகள் நடாத்திவரும் தாக்குதலை எதிர்த்து காத்தான்குடி நகர சபை கண்டனத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற காத்தான்குடி நகர சபைக் கூட்டத்தின் போதே இந்த கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் சபையில் மும்மொழிந்த இந்த கன்டனத் தீர்மானத்தை காத்தான்குடி நகர சபை ஏகமனதாக அங்கீகரித்தது.
முஸ்லிம்களின் புனித பள்ளிவாயல்கள் மீது பௌத்த தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதலை நடாத்திவருகின்றனர். இந்த புனிதமான றமழான் மாதத்திலும் கூட மஹியங்கனை பள்ளிவாயல் மீது தாக்குதல் நடாத்தியதுடன் அப்பள்ளிவாயலையும் மூடிவிட்டுள்ளனர். அத்தோடு இறைச்சி லொறியொன்றையும் பௌத்த தீவிரவாதிகள் நெருப்பு வைத்து தீக்கிரையாக்கியுள்ளனர்.
இவ்வாறு முஸ்லிம்களின் புனித வழிபாட்டுத்தளங்களான பள்ளிவாயல்கள் மீது தொடாச்சியாக நடாத்தப்பட்டுவரும் தாக்குதலை காத்தான்குடி நகர சபை வன்மையாக கண்டிப்பதுடன் இதன் பின்னணியில் செயற்பட்டு வருபவர்களை அரசாங்கம் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது. இவ்வாறான சம்பவங்களினால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலைமையில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இக்கண்டன தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இம் முறை நோன்புப் பெருநாள் பசாரை (பெருநாள் ஒன்று கூடலை)காத்தான்குடி சின்னப்பள்ளிவாயல் பகுதியில் ஆற்றங்கரை ஓரம் செய்வதெனவும் தீர்;மானிக்கப்பட்டது.
நேற்றைய காத்தான்குடி நகர சபை அமர்வில் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், மற்றும் நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர், றஊப் ஏ மஜீட், அலி சப்ரி, எம்.எஸ்.சியாத்,அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல், எம்.நசீர், சல்மா அமீர் ஹம்சா ஆகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இரு மாதங்களுக்கு முன் இந்நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடைபெற்று வரும் பேரினவாத சக்திகளின் இவ்வாறான அச்சுறுத்தல்களையும், தாக்குதல்களையும் கண்டிப்பதற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டபோது, இதே தவிசாளர் அதனை சபைத் திர்மானமாக நிறைவேற்ற முடியாது என்று மறுத்திருந்தார்.
ReplyDeleteஇதுதொடர்பில் சபையில் பேசிய ஆளுந்தரப்பு உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர், "நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தால் அதில் நாங்களும் கலந்து கொண்டு ஆதரவளிப்போம். தவிர இவ்வாறான கண்டனத் தீர்மானங்களை சபைத் தீர்மானமாக நிறைவேற்ற முடியாது" என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். (குறித்த ஒலிப்பதிவு இன்னமும் பத்திரமாக உள்ளது)
இந்த நிலையில் இப்போது இப்படியொரு மாற்றம் இச்சபையில் நிகழ்ந்துள்ளது. என்ன காரணமாக இருக்கலாம்...? யோசிக்க வேண்டிய விஷயம்! பின்னணி என்ன என்பதை விரைவிலேயே கண்டு கொள்ளலாம்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
பௌத்த இனவாதிகள் பள்ளிவாயல்களை உடைக்கின்றர்களோ என்னவோத மானங்கெட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் இச்சம்மவங்களை வைத்து அரசியல் புழைப்பு நடாத்துவதை மட்டும் இன்னும் விடவில்லை. அன்மைக்காலங்களின் வன்மமாக அதிகரித்திருந்த பௌத்த இனவாத போக்கினை கண்டித்து காத்தான்குடி நகரசபையில் எதிர்க்கட்ச்சியினால் கொண்டுவரப்பட்ட கண்டனத்தீர்மானத்தை சபையில் நிறைவேற்ற முடியாதென ஒற்றைக்காலில் நின்ற ஆளும்தரப்பினர் தற்போது மஹியங்கனை பள்ளிவாயல் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டனப்பிரகடனம் நிறைவேற்றி உள்ளமை அரசியல் இல்லாமல் சமூக சேவையா?
ReplyDeleteஅண்மையில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மஹியங்கனை பள்ளிவாயல் தாக்கப்பட்டதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கு அனுப்பிய கடிதம் இன்னும் போய் சேரவில்லை போல் தெரிகின்றது. கடிதத்தை அனுப்ப முன்னமே ஊடகங்களுக்கெல்லாம் செய்தி அனுப்பி பெருமை தேடிக்கொள்ளும் அரசியல் புழைப்பு இவரை விட்டு இன்னும் போகவில்லை.