Header Ads



நாளை வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல்

               (ஏ.எல்.ஜுனைதீன்)

வடக்கு, மத்திய வடமேல் மாகாண சபைக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நாளை வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.   

ஒவ்வொரு மாகாணங்களிலும் போட்டியிடுபவர்கள் தத்தமது மாவட்டங்களிலேயே தனித்தனியான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.   அலுவலக நாள்களில் மாத்திரம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். 25 ஆம், 26 ஆம், 29 ஆம், 30 ஆம், 31 ஆம் திகதிகள் வரையே இந்த நடைமுறை பின்பற்றப்படும்.   ஓகஸ்ட் முதலாம் திகதி காலை 8.30 மணியிலிருந்து மதியம் 12 மணிவரையே வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மூன்று மாகாணங்களிலும் உள்ளடங்கும் 10 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட செயலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு தனியான இடமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.