Header Ads



பதில் கோட்டக் கல்வி அதிகாரியாக நியமனம்

(நஷ்ஹத் அனா)

மட்டக்களப்பு மத்தி கல்வி கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரியாக கடமையாற்றும் எம்.சுபைர் ஏறாவூர் கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு பதில் கோட்டக் கல்வி அதிகாரியாக (25.07.2013) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரியாக கடமையாற்றிய ஐ.எல்.ஸட்.ஆப்தீன் ஓய்வு பெற்றுச் சென்றதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எம்.சுபைர் ஏறாவூர் கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு பதில் கோட்டக் கல்வி அதிகாரியாக நேற்று முதல் கடமைகளைப் பொறுப்பேற்கும்படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் ஏ.அஹமட் லெப்பையால் பணிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரியாக கடமையாற்றும் எம். சுபைர் மேலதிகமாக ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரியாகவும் கடமைகளை மேற்கொள்வார்.

1977ம் ஆண்டு ஆசிரியர் தொழில் இணைந்து கொண்ட எம்.சுபைர் 1986ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட கல்வித் திணைக்களத்தின் நலன்புரி உத்தியோகத்தராகவும் 1999ம் ஆண்டு முதல் இன்று வரை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.