'கொய்க்கா' திட்ட அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்ட செயலமர்வு
(அனாசமி)
கிழக்கு மகாணப் பாடசாலைகளில் யுனிசெப் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் 'கொய்க்கா' திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பதினொரு பாடசாலைகளின் அதிபர்களும், அதன் ஊட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட செயலமர்வு (28.07.2013) அக்கரைப்பற்று அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.ரி.நிஸாம் மற்றும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சுகிர்தராஜா, பட்டிருப்பு வலக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம,; மாகாண யுனிசெப் இணைப்பாளர்கள் திரு. பீ. உதயகுமார், யுனிசெப் இணைப்பாளர் ஏ. நிபால் ஆகியோர் முன்னிலையில் இப்பாடசாலைகளின் கடந்தகால, எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டன. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட உதவிக் கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
Post a Comment