ஷிராணி பண்டாரநாயக்காவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
2010, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் சட்டத்திற்கமைய முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தனது சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை என குற்றஞ்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்குகள் தொடர்பாக அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் இந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 'திவி நெகும' சட்ட மூலத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்தமைக்காக அம்மையாருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சோதனைதான் இது.
ReplyDeleteநான் இந்தச் செய்திக்கான கருத்துக்கள் சிறுபான்மைச் சமூகத்திடமிருந்து வரும் என இத்தனை மணித்தியாலங்களாக எதிர்பார்ததேன். ஏமாற்றம்!
எனது அனுதாபங்களும், இந்த வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனைகளும்.
இன்று பதவிகளில் இருக்கின்ற எல்லா அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் சொத்து விவரங்களையெல்லாம் முறையாக வெளிப்படுத்தித்தான் இருக்கிறார்களா?
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
எலவ செஞ்சா எழுத்தின்படி மூடர் செஞ்சா முன்நூரடி ஐயா
ReplyDelete