யாழ்ப்பாண தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்கள் தொடர்பில் இழுபறி..!
(பாறூக் சிகான்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் மீண்டும் கடசிக்குள் குழப்பங்கள் இடம்பெறுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் வட மகாண சபை தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாகவே இக்குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் தழிழரசு கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக விருந்த சட்டத்தரணி ஒருவர் ஜக்கிய தேசிய கட்சி ஒருவரை வடமாகாணசபை வேட்பாளராக சிபார்சு செய்ததாக தெரிவித்ததை தொடர்ந்தே இப்பிரச்சினை உச்சக்கட்டளையை அடைந்துள்ளது.
மேலும் ஏற்கனவே தமிழ் தேசியத்தினை விமர்சித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை புகழ்ந்த மற்றுமொருவர் அதில் உள்ளடங்குகிறார் இதனை பார்க்கின்ற போது யாழுக்கு வரும் சம்பந்தன் விக்னேஸ்வரன் போன்றோருக்கு தலையிடி ஒன்று காத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடந்த காலங்களில் தமிழ் தேசியத்தினை வலியுறுத்தி தனது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வந்த யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பரமலிங்கம் தர்சானந் க்கு இத்தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது கட்சிக்குள் மென்மேலும் பிரச்சினைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment