Header Ads



விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், ஆஸ்திரேலியாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளதுடன், தேர்தலிலும் போட்டியிடுகிறார்.

பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதரகங்கள், தங்கள் நாட்டு அரசுக்கு ரகசிய அறிக்கை அளிப்பது வழக்கம். இந்த அறிக்கைகளில் அரசியல் நிலவரங்கள், அமெரிக்காவுக்கு எதிரான விஷயங்கள் என்று பல தகவல்கள் இடம் பெற்றிருக்கும். மற்ற நாடு களை பற்றிய மோசமான விமர்சனங்களும் இருக்கும். 

தூதரகங்களின் இந்த ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அவர் கடந்த ஓராண்டாக அங்கேயே தங்கியுள்ளார். அவர் எப்போது வெளியே வந்தாலும், கைது செய்ய போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவில் செனட் சபை தேர்தல் நடக்க உள்ளதால், ஊழல் கறைபடியாத வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து செனட் சபைக்கு அனுப்பப் போவதாக அசாஞ்ச் தெரிவித்திருந்தார்.  இதற்காக லண்டனில் உள்ள ஈகுவடார் அலுவலகத்தில் இருந்தபடி நேற்று ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் வீடியோகான்பரன்ஸ் மூலம் புதிய கட்சியை அசாஞ்ச் தொடங்கி வைத்தார். மேலும், தனது கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள 7 வேட்பாளர்களின் பெயர்களை அவர் அறிவித்தார். தான் விக்டோரியா தொகுதியில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.

அசாஞ்ச் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 2 பேரும் இடம்பெற்றுள்ளனர். மேற்குவங்கத்தை சேர்ந்தவர்களுக்கு பிறந்தவரான பினோய் கம்ப்மார்க், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு பிறந்தவரான சுரேஷ் ராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

1 comment:

  1. நம்நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் படகேறினாலும் ஏறுவார்கள்.

    எதற்கும் பாதுகாப்பு அமைச்சர் கரையோரப் பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்ளட்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.