Header Ads



இந்துத்துவ இயக்கங்கள் வெறுப்பை விதைத்து, அதன் வழியே வளர நினைக்கின்றன - பீ.ஜே.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் பீ.ஜெயினுல் ஆபிதீன் இந்துத்துவ இயக்கங்கள் மக்களிடையே வெறுப்பை விதைத்து, அதன் வழியே வளர நினைக்கின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாரமிருமுறை இதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த ஜெயினுல் ஆபிதீனிட்ம் "இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?'' என்ற கேட்கப்பட்டதற்கு, ''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை.

கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.'' என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். Inneram

5 comments:

  1. சகோதரர் பிஜே அவர்களே அங்கு மட்டுமல்ல அதே சாயலிலுள்ள ஒரு நிலைப்பாடே இங்கும் காணப்படுகின்றது. திட்டமிட்டு சில சமுக விரோத செயல்களை செய்துவிட்டு அவற்றை முஸ்லிம்கள் தலையில் போட்டுவிட்டு பழிவாங்க துடிக்கிறார்கள். “சத்தியம் வெல்லும் அசத்தியம் அழிந்தே தீரும்“ இது அல்லாஹ்வின் வாக்கு. கோழைகளாகி இறை நிராகரிப்பாளர்களாக ஆகிவிடாமல் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக. ஆமீன்

    ReplyDelete
  2. Mr. PJ, you are also doing the same thing. Make divisions among Muslim community, and gain benefits.

    ReplyDelete
  3. அடடா! Mr. PJ அதே இந்துத்துவாக்களின் இஸ்லாமிய வடிவத்தைத்தானே நீங்கள் செய்து உண்மை இஸ்லாத்தை அவமதித்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

    ReplyDelete
  4. ஜெஸ்லி!

    தண்ணியடிக்கும் பழக்கம் இருக்குபோல உங்களுக்கு.

    ReplyDelete
  5. Jesslya Jessly சகோதரி! நீங்க பெருசா உண்மை இஸ்லாத்தை அவமதிப்பவர் PJ என்று சொல்லிருக்கிறீர்கள்... ஆனால் நீங்கள் ஒரு முஸ்லிம் ஆக இருந்து கொண்டு உங்கள் blogspot இல் இசை ரசிகை என்று சொல்லியிருக்கிறிர்கள், ஆனால் எந்த முஸ்லிமும் இசை ரசிகராக இருக்க முடியாது... கரணம் இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.. முதலாவது உங்களை சரி செய்து கொண்டு அடுத்தவர்களை விமர்சியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.