Header Ads



லங்காதீப பத்திரிகையிடம் ஒருகோடி ரூபா கேட்ட பௌத்ததேரரின் வழக்கு தள்ளுபடி..!

(மொஹொமட் ஆஸிக்)

2012.03 19 ம் திகதி லங்காதீப பத்திரிகையில் வெளிவந்த செய்தி ஒன்று காரணமாக தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதால் அதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு பெற்றுத் தருமாறு  கண்டி மஹய்யாவை அசோகாராம விஹாரையின் விஹாராதிபதி வல்தெனியே வஜிஞ்ஞான தேரர் தொடுத்த வழக்கை கண்டி மாவட்ட நீதவான் சமன் காரியவசம் இன்று 2013 07 25 தள்ளுபடி செய்தார். 

லங்காதீப பத்திரிகையின்  தம்புள்ளை பிராந்திய நிருபர் காஞ்சன குமார ஆரியதாச 'பணத்துக்காக பட்டங்கள் விற்கப்படுவது' சம்பந்தமாக எழுதிய செய்தி ஒன்றிக்கு எதிராகவே வஜிரஞ்ஞான தேரர் வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்வழக்கை இன்று 2013 07 25 விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது மனுதாரான குறித்த தேரரோ அவரது சட்டததரணியோ நீதிமன்றத்தில் ஆஜராவில்லை. இது தொடர்மாக எதிர்தரப்பு சட்டத்தரணி இந்திரகுமார விஜேதிலக்க, இவ்வழக்கு விசாரணைக்கு மனுதாரர் சமூகம் அளிக்காததன் காரணமாக வழக்கை தொடர்வதில் பிரயோசனம் இல்லை என்றும் வழக்கை தள்ளுபடி செய்யுமாரும் கோரிக்கை விடுத்தார். இக் கொரிக்கையை ஏற்ற நீதவான் வளக்கை தள்ளுபடி செய்ததுடன் லங்காதீப பத்திரிகையின் தம்புள்ளை பிராந்திய நிருபர் காஞ்சன குமார ஆரியதாசவை விடுதலை செய்தார்.




1 comment:

  1. நீதி இருந்தால் நீதி மன்றம் என்று சொல்லலாம் ..
    நீதி இல்லா விட்டால் என்னவென்று சொல்வது?

    தேரருக்கு நீதி வேண்டுமாம் .. ஆச்சிரியமா இல்ல ?

    "தனக்கு வந்தால் தெரியும்"

    ReplyDelete

Powered by Blogger.