இதய நோயால் பாதிக்கப்பட்ட மௌலவிக்கு உதவுங்கள்..!
மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த மௌலவி B.M. லுத்பி, இதய நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இதயம் 40 வீதம் மட்டும் இயங்குவதால் அவசரமாக இதய அறுவைச்சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மேற்படி அறுவைச்சிகிச்சை செய்ய பத்து இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவுத்துள்ளனர்.
மௌலவி B.M. லுத்பி அவர்கள் மூதூர் நத்வதுல் உலமா அரபிக்கல்லூரியில் இஸ்லாமிய கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின் அதே கல்லூரியில் சுமார் ஒன்பது வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றியவர். தற்போது அவர் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவரின் நோய் குணமடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு வேண்டுவதோடு, வைத்தியர்களால் வேண்டப்பட்டுள்ள பத்து இலட்சம் ரூபாவில் தங்களுக்கு முடியுமான தொகையை இப்புனித ரமழான் மாதத்தில் வழங்கி உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
வங்கிக் கணக்கு: HNB : 191020003219
People's Bank: 095200170011982
Mobile: 0754686356
Post a Comment