Header Ads



முஸ்லிம் மீடியா போரம் கண்டனம் தெரிவிப்பு

பிராந்திய ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிராந்திய ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். குறித்த ஊடகவியலாளரினால் ஊடகமொன்றிற்கு எழுதப்பட்ட செய்தியினை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. 

எனினும் இந்த செய்தியில் ஏதாவது பிழைகள் காணப்பட்டின் உரிய ஊடக நிறுவனத்துடன் பேச்சு நடத்தி மறுப்பு செய்தி வெளியிட்டிருக்க முடியும். இதனை விட்டு ஊடகவியலாளரின்  வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

இந்த சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதுடன் பின்னணியில் உள்ளோரை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதன் காரணமாக எதிர்காலத்தில் இதுபோன்று போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்' 

பிராந்திய ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது இனந்தெரியாதேரினால் நேற்று வியாழக்கிழமை இரவு தாக்குதலுக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.