Header Ads



எம்முன்னுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள முழு சமூகமும் முன்வரவேண்டும்' - றிசாத்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

எமக்கு முன்னால்  உள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒரு அமைச்சராலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராலோ முடியாது, முழு சமூகமும் முன்வரவேண்டிய காலம் எற்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் தில்லையடியில் இடம் பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.மேலும் அமைச்சர் றிசாத் பதீயுதின் கருத்துரைக்கும் போது,,

இடம் பெயர்ந்த சமூகத்திற்கு என்னால் ஆன அனைத்து பணிகளையும் ஆற்றிவருகின்றேன்.மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்கின்ற போது அதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனையும் தாண்டி எமது அரசியல் பலத்துடன் செல்ல முயற்சிக்கின்ற போதும்,எமது இலக்கை அடைய முடியாதுள்ளது.இன்று எமது சமுகத்தில் இருக்கும் துறை சார்ந்தவர்களும் ஒன்று பட்டு இந்த முயற்சியினை முன்னெடுக்க முன்வரவேண்டும்.

இன்று எதனை நாம் செய்தாலும், அதற்கு இனவாத சாயம் பூசி அதன் மூலம் இனங்களுக்கியைடில் முரன்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம் இன மோதல்களை ஏற்படுத்தி மீண்டும் மக்கள் அச்ச சூழ்நிலையி்ல் ஆழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்றவர்கள் இவற்றை சரியாக சகோதர சமூகத்தின் மத்தியில் தெளிவுபடுத்தும் பணியினை செய்ய வேண்டும்.எனக்கு என்ன போச்சுது என்ற பொறுப்பற்ற பதிலை எவரும் கூற முற்படக் கூடாது.

நாட்டில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை அகன்றுள்ளது. இந்த சூழல் எற்படுமா என்று எம்மில் எத்தனையோ பேர்கள் கேள்விகளை எழுப்பியிருப்போம். இன்று ஏற்பட்டுள்ள அந்த சூழலை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது என்பது குறித்து சிந்தணை செய்வதுடன்,அதற்கான முயற்சிகளை தாமாக முன்வந்து செய்ய முன்வரவேண்டும்.சிறந்ததொரு சமூகத்தினை உருவாக்கும் பொருப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம்,அதனை உரிய முறையில் பாதுாக்க வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்

4 comments:

  1. சமூகம் சந்தித்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர்களாலும், நாடாளுமன்றப் பிரதிநிகளாலும் முடியாத பட்சத்தில் நீங்கள் அந்தப் பதவிகளைத்தூக்கி எறிந்து விட்டு முதலில் வெளியே வர வேண்டும். அப்போதுதான் முழுச் சமூகமும் உங்களோடு முன்வரும்.

    நீங்கள் அமைச்ர்களாகவும், உறுப்பினர்களாகவும் அரச பாதுகாப்புடன் பந்தோபஸ்தாக இருக்கும்போது முழுச் சமூகமும் தெருவுக்கா முன் வந்து கூக்குரலிடுவது? பின்னர் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்ற பொலீசார் வழக்குப் பதிவு செய்து லொக் அப்பிலும், சிறையிலும் இருப்பது??

    சும்மா பீத்தல் பேச்சு பேசி சமூகத்தை பிழையான வழியில் இன்னமும் வழிநடத்தாமல் நீங்கள் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியில் வாருங்கள். சமூகம் உங்களோடு வருகிறதா இல்லையா? என்பதை அப்புறம் பாருங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Mr.Rahmathullah ningal kattankuti ungaduku Hisbuklah minister iruhiraru wadaku muslim kalin pirachchinai enna venru ungal yarum thariyathu Vanni ku wanthu parungal ACMC LEADER HON RISAD BATHIRUDEEN MINISTER saihinra sevaienai
    Minister velila wanthal Vanni Muslimgal Sagavendiyathu than

    Ippadiyana Comments podurathu stop panungal ok

    ReplyDelete
  3. நான் மேற்குறிப்பிட்ட எனது கருத்தைப் பதிவு செய்த பின் மாலை 04:04 மணிக்கு 0112390885 என்ற இலக்கத்திலிருந்து இந்தச் செய்தியை ஜப்னா முஸ்லிமுக்கு அனுப்பிய சகோதரர் இர்ஷாத் றஹ்மதுழ்ழாஹ் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

    எனது கருத்தில் உடன்பாடு கொண்டிருப்பதாகவும், ஆனாலும் ஊடகவிலாளரான நான் கண்ணியமாக கருத்துக்களை எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன், நான் காத்தான்குடி என்றும், எங்களுக்கு ஹிஸ்புல்லா இருக்கிறார் என்றும், வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரியாதென்றும், வன்னிக்கு வந்து அமைச்சர் றிஷாத் பதியுத்தீனின் சேவைகளைப் பாருங்கள் என்றும் எனக்குப் புத்திமதி கூறினார்.

    பின்னர் மஃரிப் தொழுதுவிட்டு ஜப்னா முஸ்லிமைப் பார்த்தபோது அதே கருத்தை மேலுள்ள shmwajith என்ற சகோதரரும் கூறியிருக்கின்றார். செய்தியாளரும், வாசகரும் ஒரே கருத்தைக் கூறியிருப்பதால் நான் இப்போது அந்த shmwajiyh சகோதரர் யாராக இருப்பார் என்று யோசிக்கின்றேன்.

    'இப்படியான கருத்துக்கள் போடுவதை நிறுத்துங்கள் ' என சகோதரர் shmwajith தெரிவித்திருப்பது எனக்கா அல்லது ஜப்னா முஸ்லிம் இணையதளத்திற்கா?

    இப்படிக் கேட்பது எந்த வகையில் நியாயம்? கருத்துக்களைச் சொல்லத்தானே ஜப்னாமுஸ்லிம் ஒவ்வொரு செய்திக்கும் கீழே Post a Comment பகுதியையும் இணைத்துள்ளது?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. Nan sonnathu mr Rahummathullah ungaduku than
    Ellathaium karuthaga edru kolla mudiyathu.
    Vanni nilanai ungaduku thariyathu thana.
    Vanni muslimgal pawam seeeeeeeee

    ReplyDelete

Powered by Blogger.