Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கம்

தென்கிழக்குப் பல்கலைகழகத்தின் ஆர்ப்பாட்டமும் அதன் உண்மைத்தன்மையும்

கடந்த 28.06.2013 அன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூவின மாணவர்களும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இவ்வார்ப்பாட்டம் சம்பந்தமான தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்த போதும் எந்தவொரு ஊடகமும் இது பற்றிய முழமையான உண்மைத்தகவல்களை வெளியிடாமை குறித்து மாணவர்கள் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது பற்றிய உண்மைக் காரணங்கள் வெளிவராமைக்கான காரணம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாணவர்களை வெளியே செல்ல முடியாத வகையிலும், ஊடகங்களை உள்ளே வர முடியாத வகையிலும் பிரதான நுழைவாயிலை மூடி தடையை ஏற்படுத்தியிருந்தமையாகும்.

ஆர்ப்பாட்டத்திற்கான காரணம்

குறிப்பிட்ட தினத்திற்கு முன்தினம் கமலசிரி என்ற மாணவனுக்கு காலவரையரை அற்ற வகையில் கடிதம் வழங்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட காரணம் விரிவுரையாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலாகும். இக் காரணமே கடிதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது (இக்கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது). மேலும் இவர் எந்த வித பகிடிவதையிலும் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதே வேளை குறிப்பிட்ட மாணவர் விரிவுரையாளரை யார் என்று தெரியாததன் காரணமாகவே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பதும், அவர் விரிவுரையாளர் என்று தெரிந்ததும் அவரிடம் மன்னிப்புக் கோறியதும், குறித்;த விரிவுரையாளர் அவருக்கு மன்னிப்பளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். இருந்த போதும் எவ்விதக் காரணமும் இன்றி அநியாயமாக வெளியேற்றப்பட்டார். குறிப்பிட்ட மாணவனும் மணவேதனையுடன் வெளியேறினார்.
எனவேதான் இவ்வாறு 

1.அநியாயம் இழைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மாணவனை மீண்டும் பல்கலைக்கழகத்தினுல் உள்வாங்குமாரும். 

2.இதற்கு மூல காரணமாக இருந்த, மாணவர்களின் நலனுக்கு பொறுப்பாக இருந்தும் மாணவர்கள் சம்பந்தமாக எவ்வித அக்கறையும் அற்ற வகையில் தொழிற்படும் 'மாணவர் நலன்புரி சேவை பணிப்பாளரை  மாற்றக் கோரியுமே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்பதே இவ்வார்ப்பட்டத்துக்கான உண்மைக் காரணமாகும்.

ஆனால் பல ஊடகங்களும் இவ்வார்ப்பட்டத்தை 'பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமாக சுட்டிக் காட்டியிருந்தமை கவலைக்கிடமான விடயாமாகும்' மேலும் இவர் எந்தவித பகிடிவதையிலும் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



No comments

Powered by Blogger.