அபாயா அணிந்த திருடர்கள் வீட்டில் புகுந்து கொள்ளை
(vi) அபாயா அணிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் ஆர்.சி. வீதியின் வசிக்கும் முகம்மது நெளபர் வாகிதா என்றழைக்கப்படும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு இனம் தெரியாத நபர்கள் அபாயாவை அணிந்த நிலையில் கத்தியை காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்து 08 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 17 பவுண் நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவன் சம்பவ தினம் அதிகாலை 4.30 மணியளவில் தொழுகைக்காக சென்ற வேளையில் இதனை அவதானித்த மேற்படி திருடர்கள் இக்கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
Post a Comment