இஸ்லாமிய சமுதாயம் பெரும் பங்காற்றியுள்ளது - இப்தார் நிகழ்வில் ஒபாமா
அமெரிக்காவில் வாழுல் முஸ்லிம் பிரமுகர்களுக்கு அதிபர் ஒபாமா இப்தார் விருந்து அளித்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் வாழுல் முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒபாமா பேசியதாவது:-
நமது நெடிய வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் நாட்டின் வளர்ச்சியில் இஸ்லாமிய சமுதாயம் பெரும் பங்காற்றியுள்ளது. ஒவ்வொரு நாளும் அமெரிக்க இஸ்லாமியர்கள் நமது நாட்டின் வடிவமைப்புக்காக உழைக்கின்றனர் என்பது தெரியவரும்.
ரமலான் மாதம் என்பது, வழிபாட்டின் மூலமாகவும், நோண்பின் மூலமாகவும் பக்தியை வெளிப்படுத்தும் மாதம் ஆகும்.
அதேபோல், உறவினர்களும் நண்பர்களும் ஒன்றினையும் மாதம் ஆகும். இதைப்போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நமது நாட்டின் ஒருமைப்பாட்டை உணர முடிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அந்த இப்தார் நிகழ்ச்சி வெறும் நாடகமே
ReplyDelete