ஜமாஅதே இஸ்லாமியும், தனவந்தர்களும் கவனம் செலுத்துவார்களா..?
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 5ஆம் கொளனியில் 15 வீடமைப்புத்தி்ட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு உதவி புரியுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது கல்முனைப்பிரதேசத்தில் வீடுகளை இழந்த கல்முனை சாய்தமருது மருதமுனை ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் இங்கு வீடுகள் நிர்மானித்துக்கொடுக்கப்பட்டன.இங்கு மின்சாரம் ஒழுங்கான முறையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.அத்துடன் குடிநீருக்குத் தட்டுப்பாடும் நிலவுகின்றது. அத்துடன் இங்குள்ள மக்கள் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இப்பிரதேசத்தில் உள்ள தனவந்தர்கள் இம்மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என வேண்டுகோள் வடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment