யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சியில் மௌலவி சுபியான்..??
(யாழ்ப்பாணத்திலிருந்து பாறூக் சிகான்)
வட மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வேட்பாளராக போட்டியிடவிருந்த முன்னாள் விடுதலை புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று வெளியாகிய வட மாகாண சபை வேட்பாளர்களின் விபரங்கள் வெளியீட்டில் தனது பெயர் உள்ளடக்கப்படாமை குறித்து அவர் கவலை அடைந்திருப்பதுடன்இ தனது நிலைப்பாட்டை தெரிவிக்க ஊடகங்களை நாளை சந்திக்கவுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராம நாதன்இ முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றேமிடியஸ்இ சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம்இ நெல்லியடி வணிகர் கழகத்தலைவர் அகிலதாஸ்இ யாழ் மாநர சபை உறுப்பினர் அகமட் சுபியான்இ எஸ்.செந்தூரன்இ எஸ். கதிரவேல் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்திருந்த புலிகளின் தயாமாஸ்டர்இ சிராஸ் ஆகியோரின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது..
ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் நடந்த மேற்படி கட்சிக் கூட்டத்தில் புலிகளின் தயாமாஸ்டர் அரசாங்கத்தினை சார்ந்து தனது ஆதரவினை தெரிவித்து கருத்து தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முஸ்லிம்களுக்கு படு பாதமாக செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக களம் இருங்கி இருக்கும் சுபியான் மெளலவியை முஸ்லிம்களின் அடிமைச் சின்னமாகவே பார்கிறேன்.
ReplyDeleteவட மாகான முஸ்லிம் வாக்காளர்களே..! இந்த இரண்டு பேரினவாத இனத்தையும் முகம் கொடுக்க வேண்டுமானால் தனித்துவம் பேணும் முஸ்லிம் குழுவிக்கே உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும். நாம் ஒரு பேயை ஆதரித்தால் மற்றப் பேய் கோபித்துக் கொள்ளும். எனவே கட்டம் கட்டமாக முஸ்லிம்களின் நலனுக்கு ஏற்ப நாம் நமது காய்களை நகர்த்த தனித்துவம் பேணும் முஸ்லிம் குழுவுக்கே நமது மிகவும் பெறுமதி வாய்ந்த வாக்குகளை அளிக்க வேண்டும்.
Allahvai Nesikkinrara or Mahintha Rajavai Nesikkinrara
ReplyDelete17, Masjids Udaikkapadathu Everin Karuththu Enna
(Anieyaya Aachchikku Thunai Povathu Islathai Vieddu Velieyariveddar Al-Hathis Thaparnie)
=====Kalmunai Mohamed Fowse================
இவருக்கு ஹலால் ஃபத்வா கிடைத்திருக்குமோ!
ReplyDelete