Header Ads



கொழும்பு வாழ் முஸ்லிம் இளைஞர்கள் நோன்பு காலத்தில் அவதானமாக செயற்பட அறிவுரை

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கொழும்பு வாழ் முஸ்லிம் இளைஞர்கள் நோன்பு காலத்தில் இரவு வேளைகளில் பிரதான வீதிகளிலும் சிறுசிறு தெருக்களிலும் வீண் விளையாட்டுக்களிலும் விரும்பத்தகாத செயற்பாடுகளிலும் ஈடுபடாமல் பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் தங்களது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுவதற்கான பூரண ஒத்துழைப்புகளை  வழங்குமாறு கொழும்பு அக்ரம் பவுண்டேஷன் இளைஞர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நோன்பு காலம் தொடர்பாக இவ்வமைப்பின் செயலாளரும், பொலிஸ் ஆலோசகருமான எம்.என்.எம்.ஹிமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது நோன்பு காலம் ஆரம்பமாகியதும் விசேடமாக முஸ்லிம் இளைஞர்கள் நோன்புடன் ஒழுங்கைகளிலும் பிரதான பாதைகளிலும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீண் விளையாட்டுக்களிலும் கூத்துக்களிலும் ஈடுபட்டு வந்தனை கடந்த காலங்களில் நாம் காணமுடிந்தது. இதனால் பாதைகளில் செல்வோரும் வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது.
அவ்வாறான செயற்பாடுகள் எதிர்வரும் நோன்பு காலத்தில் ஏற்பாடாதிருக்கும் வகையில் இந்த அறிவுறுத்தலை அவ்வமைப்பு விடுக்கின்றது.

அன்னிய சமூகத்தவர்களுக்கு மத்தியிலேயே முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் மேற்கொள்கின்ற எமது மத அனுஷ்டானங்கள் ஏiனைய மதத்தினருக்கு இறையூறாக ஒருபோதும் அமையக்கூடாது. எம்மைப் பொறுத்தவரை நோன்பு காலம் பல நன்மைகளையும் படிப்பினைகளையும் எமக்கு பெற்றுக்கொடுக்கின்ற மாதம். சாதாரண காலங்களைப்போல் அல்லாது இம்மாதத்தை நாம் மிகவும் கண்ணியப்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் முஸ்லிம்களாகிய நாம் மார்க்க விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் பல அமைப்புக்களின் செயற்பாடுகளினால் கடந்த பல மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகி வருகின்றோம். இவ்வாறான அமைப்புக்கள் இந்த நோன்பு காலத்தில் எமது செயற்பாகளை உன்னிப்பாக அவதானிப்பார்கள். எமது செயற்பாடுகள் ஏனையவர்களுக்கு அசௌகரியமாக இருந்தால் மேலும் பல விடயங்களில் எமக்கு தடைகளை ஏற்படுத்த முற்படுவார்கள்.

எனவே நாம் புனிதமான இந்த நோன்பு காலத்தில் குர்ஆன், ஹதீஸ் அப்பiடையில் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளும்போது ஏனையவர்களும் எமது முன்மாதிரிகளை கடைப்பிடிக்க முற்பாடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேசமும் இல்லை. ஆத்துடன் அவர்களின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கும்.

இதுதவிர நோன்பு திறக்கும் நேரத்திலும் அதிகாலை நோன்பு பிடிக்கும் சஹர் வேளையிலம் எமது வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை ஏனைய சமூகத்தவர்களும் அயலவர்களும் பாதிக்காத வகையில் பயன்படுத்த வேண்டும்.

எனவே இவ்விடயத்தை இளைஞர்கள் மிகவும் கவனத்திலெடுத்து புனித நோன்பை கண்ணியப்படுத்தி ஈருலகிலும் வெற்றிபெற்ற கூட்டத்தில் சேருவதற்கான வழிபாடுகளில் ஈடுபடுமாறு அவ்;வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.