கிரண்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் - ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான இனவாத அமைப்புக்கள்..!
கிரண்ட்பாஸில் கடந்தவாரம் திறந்து வைக்கப்பட்ட பள்ளிவாசல் பௌத்த பிக்குகளில் எதிர்ப்பு காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஆராய்வதற்காக இன்று திங்கட்கிழமை பௌத்தசாசன அமைச்சில் முக்கிய கூட்டமொன்று நடைபெறிவிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பௌத்த சாசன அமைச்சு பள்ளிவாசலுக்கு வழங்கிய அனுமதியை ரத்துச்செய்ய வலியுறுத்தும் நோக்குடன் பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவாய ஆகிய பிக்குகளை அழைத்துக்கொண்டு கிரண்பாஸ் பள்ளிவாசலுக்கு எதிராக செயற்படும் பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிக்குகளும், அவர்களுக்கு ஆதரவான சில பொதுமக்களும் 2 பஸ்களில் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் பௌத்த சாசன அமைச்சு செயலாளர் குறித்த கூட்டத்தில் பங்கேற்காமை காரணமாக அந்த ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்தவர்களின் திட்டம் பலிக்கவில்லை என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
அதேவேளை கிரண்ட்பாஸில் கடநதவாரம் திறக்கப்பட்ட பள்ளிவாசல் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இப்பள்ளிவாசல் குறித்த அடுத்தக்கூட்டம் எப்போது நடைபெறுமென்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
Post a Comment