Header Ads



எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அவல நிலை (படங்கள்)



(எஸ்.எச்.எம்.வாஜித்)

மன்னார் எருக்கலம்பிட்டி என்பது மன்னார் மாவட்டத்தின் ஒரு முக்கியமான பிரதேசமாகும் இப்பிரதேசத்தின் ஒரு கண்ணாக விளங்கும் இப்பாடசாலையின் அவலநிலையினை கேட்பதற்கு யாராவதா உண்டா?
செல்வந்தர்கள் அதிகம் வாழும் பிரதேசம்
அரசியல் தலைமைகள் உண்டு
வெளிநாட்டு தூதுவர்களைக் தன்னகத்தே வைத்திருக்கும் ஊர்
மறைந்த தலைவர் அல்ஹாஜ் நூறுத்தீன் மசூரின் சொந்த ஊர்
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்கள்; களமிறங்கும் பிரதேசம்..!

இத்தனை வளங்களையும் கொண்ட இப்பிரதேசத்தின் கல்வியின் அடி நாதாமாக விளங்கும் பாடசாலையின் அவலநிலையினை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் யாருமில்லையா..? மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் அதிவேகமாக இடம்பெறும் இத்தருனத்தில் இப்பாடசாலையின் அவலநிலையினை கேட்பதற்கு யாருமில்லை.

நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இக்கிராமத்திலிருந்து பல செல்வந்தர்கள் தாம்வெல்லுவோமா அல்லது தோற்போமோ என்ற நிலையிலும் பல கோடிக்கணக்கான ரூபாய்க்களை அள்ளியிறைக்க ஆயத்தமாக இருக்கும் வேட்பாளர்களே தங்களின்  கவனத்திற்கு தங்களின் கோடிகளில் சிலதை இப்பாடசாலையின் கண்ணீரைத்துடைக்க தயாராகுங்கள் இது நிலையான தர்மமாகும் இதுதான் எமக்கு எப்போதும் துனையாக இருக்கும்..!!


1 comment:

  1. இதென்னப்பா ஆச்சரியமாயிருக்கு?

    மன்னாரிலதான் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பாரிய அபிவிருத்தி செய்யுறதா எல்லோரும் றீல் உர்றாங்களே.. அப்போ இதெயெல்லாம் அவருடைய மீடியாக்கள் படம் புடிச்சிக் காட்டல்லியா..?

    கலர் கலரா தெருத்தெருவா போஸ்டர் அடிச்சி ஒட்டப்போற காசி போதுமே இந்த மகா வித்தியாலத்த ஒரு மாத்து மாத்திக் காட்ட..!

    இப்பகூட நான் மடடக்களப்பு காத்தான்குடியான்.. இதப்பத்தியெல்லாம் நான் கருத்துச் சொல்லக் கூடாது என்டு எனது எழுத்துக்கு ஆப்பு வைக்கவும் சிலபேரு கொமன்ட்ஸ் போடுவாங்க..

    வேறொண்ணுமில்ல கண்ணா... அது ரத்த சகோதர பாசம்..!

    இந்த நாட்டில முதன் முதலா ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிள்ளைங்கதான் எங்க காத்தான்குடி மத்திய கல்லூரியும், உங்க எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியும்.

    அதனாலதான் நாலு வரி எழுதிட்டேன். கோவிச்சுக்காதிங்க..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.