எகிப்து இராணுவம் வெறியாட்டம் - ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
கெய்ரோவில் உள்ள மசூதியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட முர்சியின் ஆதரவாளர்கள் மீது இன்று ராணுவமும் போலீசாரும் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 120 பேர் பலியானதாகவும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பலியானவர்களில் பலர் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும் அந்த செய்தி சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி - மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அலவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள முஹம்மது முர்சி மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை வெளிப்படையான முறையில் விசாரிக்க வேண்டும்.
எகிப்து மக்கள் தங்களுக்குள்ளான வேற்றுமைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொண்டு நாட்டில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்.
எகிப்து மக்களின் பேச்சுரிமை, போராடும் உரிமைகளுக்கு ஆட்சியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். அமைதியான முறையில் போராட்டங்கள் நடப்பதையும் மக்களின் பாதுகாப்பையும் இடைக்கால ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=FU4VKkmrgNs
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=FU4VKkmrgNs
அந்நுர் கட்சிக்கு இப்ப நல்லா தூக்கம் போகும். 60 வருட பிர்அவ்னின் ஆட்சியை பொறுத்த இவர்களுக்கு ஒரு வருட முர்சியின் ஆடசியை பொறுக்க முடியவில்லை. முர்சியின் ஆட்சியில் எத்தனை பேர் கொல்லபட்டார்கள்? சீசியின் அட்சியில் எத்தினை பேர் கொல்லப்பட போகின்றார்கள்?
ReplyDeleteமுர்சி வழங்கிய ஆட்சியை விட சீசியின் இஸ்லாமிய ஆட்சி அந்நூர் இற்கு எவ்வளவோ மேல்.
அதல் ஷரியா அப்படியே அமுல் நடத்தப்படுகின்றது. எகிப்தின் ஊடகங்கள் எல்லாம் நடுநிலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
தாஹிர் சதுக்கத்தில் நோன்பு நேரத்தில் உண்டு பருகி கொண்டாட்டம். நஸ்ர் பகுதியில் நோன்பிலும் தொiழுகையிலும் இவர்கள் போராட்டம். இயக்க வெறி காரணமாகவும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் எமது நாட்டைசந் சேர்ந்த சில மேதாவிகள் இந்த இஸ்லாமிய வாதிகளை மோசமாக சித்திரித்துக் கொண்டிருக்கின்றார்கள.
எழுத்திலும் பேச்சிலும் தூசித்துக் கொண்டிருக்கின்றார்கள். இஹ்வாண்கள் சவுதியின் பணத்தில் அரசியல் செய்திருந்தால் இன்று அவர்களால் சுவர்க்வாதிகளாக முகநூலிலும் இணையத்திலும் பதிவு செய்யப்பட்டிருப்பார்கள்.
பத்றுடைய காலத்தில் நோன்பாளிகளாகவும் தொழுகையாளிகளாகவும் இருக்கும் இவர்களை விட அந்த மதச்சார்பற்ற சீசியும் தாஹிரில் கூடியுள்ளவர்களும் இவர்களுக்கு மேலாகத் தெரிகின்றார்கள.
போகிற போக்கப்பார்த்தா 120 பேர் கொல்பட்டது அவர்களே அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் சீசியின் அடிவருடி அல்ல என்றும் எழுதுவார்களோ தெரியாது,