புத்தகாய மீதான தாக்குதல் காட்டுமிராண்டித் தனமானது - அஸாத் சாலி
இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பௌத்தர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான புத்தகாயவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதளை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவத்துள்ள குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புத்தகாய புத்தபிரானின் வாழ்வோடு தொடர்பபட்ட பௌத்த சமயத்தின் நான்கு புனிதத் தலங்களுள் ஒன்றாகும். இங்குதான் புத்தபிரான் தியானத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவருக்கு ஞானம் கிடைத்ததாகவும், மகாபோதி ஆலயம் என்று அழைக்கப்படும் இங்குள்ள பௌத்த பேராலயம் பிற்காலத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது என்று வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.2002ம் ஆண்டுமுதல் யுனெஸ்கோவின் உலக மரபுரிமைச் சின்னமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதன் சிறப்புக்கள் இன்னும் நிறைய உள்ளன.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட ஒரு புனித ஆலயத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் காட்டுமிராண்டித் தனமானது.யார் எதற்காக இதை செய்தாலும் அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் நாம் அதைக் கண்டிக்கின்றோம். தீவிர வாதமும் பயங்கரவாதமும் எந்த வடிவில் எங்கு வெளிப்பட்டாலும் அதை கண்டிக்க வேண்டிய, அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு நாகரிகமடைந்த சமூகத்துக்கு உள்ளது.தேசிய ஐக்கிய முன்னணி இதில் ஒருபோதும் பின்நிற்காது.
இதேநேரம் உள்ளுரில் சிறுபான்மையினருக்கு எதிரான விஷமத்தனமான நடவடிக்கைளில் ஈடுபடுகின்றபோதும் அவர்களுக்கு எதிராக சண்டித் தனங்களில் ஈடபடுகின்றபோதும் அதன் பிரதிபலிப்பு சர்வதேச அரங்கில் எதிரொலிக்கும் என்பதை உள்ளுர் இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.புத்தகாய தாக்குதலால் இலங்கை பௌத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனையில் நாமும் பங்கேற்கிறோம். அதேபோல் உள்ளுரில் சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்டுகின்ற போது அவர்களுக்கு எற்படுகின்ற வேதனையையும் பௌத்த சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சம்பவத்துக்கான காரணங்களை வெறும் யூகங்களாக வெளிப்படுத்துவதை நிறுத்திக் கொண்டு,இதை மனதில் வைத்துக் கொண்டு மேலும் இனவாத கருத்துக்களை கக்குவதையும் நிறுத்திக் கொண்டு இந்திய அரசு இதில் சம்பந்தப்பட்டவர்களை கணு;டுபிடிக்க வேண்டும் என்று இலங்கை அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவைச் சாரும். அதேபோல் நம் நாட்டிலும் சிறுபான்மையினருக்குச் சொந்தமான பல வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன.அவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பாகும்.
தேசிய ஐக்கிய முன்னணி
ஊடக பிரிவு
intha paattu theriyuma. yar aluthu yar thuyaram maarum......
ReplyDelete