இலங்கையில் தங்கத்தின் விலைகளில் மீண்டும் வீழ்ச்சி
உள்நாட்டு வர்த்தக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு பவுண் 24 கரெட் தஙகத்தின் விலை 44 ஆயிரம் ரூபா வரையில் வீழச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின், தங்காபரணத்தின் பெறுமதி கணிப்பீட்டு பிரிவின் ஆலோசகர் எஸ்.பீ.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு பவுண் 22 கரெட் தங்கத்தின் விலை 39 தொடக்கம் 40 ஆயிரம் ரூபா வரையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டின் பின்னர் தற்போது தங்கத்தின் விலை இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment