உலகவாழ் பௌத்தர்களிடம் இந்தியா மன்னிப்புக் கோர வேண்டும் - ஞானசார தேரர்
(Adt) புத்தகாயாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா அனைத்து உலகவாழ் பௌத்தர்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
குண்டுத் தாக்குதல்களை கண்டித்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மகஜர் ஒன்றை கையளிக்கும் பொருட்டு இன்று (10) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.
அதன்போது உரையாற்றிய கலபொட அத்தே ஞானசார தேரர், தாக்குதல் குறித்து முன்கூட்டிய இந்திய புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் விகாரையை பாதுகாக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.
Post a Comment