முஸ்லிமாக மாற்றியதை ரத்துச் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
(Inne) மலேஷியாவின் ஈப்போ மாநிலத்தில் இந்திய தம்பதிகள் பத்மநாபன் - இந்திராகாந்தி தம்பதியினர் வசித்து வந்தனர்.
மூன்று குழந்தைகளையுடைய இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்தனர். இந்நிலையில், பத்மநாபன் முஸ்லிமாக மாறிவிட்டார். பின்னர் தனது மூன்று குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை எடுத்துச் சென்று அவர்களையும் முஸ்லிமாக மாற்றிவிட்டுள்ளார்.
இது குறித்து இந்திராகாந்தி, மலேஷிய உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து, தனது பிள்ளைகளை மதம் மாற்றியதைத் திரும்பப் பெற வலியுறுத்தினார். தனது மனுவில் இந்திராகாந்தி, "‘கடந்த 2009 ஆம் ஆண்டு எனது வீட்டுக்குள் பத்மநாதன் அத்துமீறி நுழைந்து, எனது இளைய மகளையும், 3 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களையும் எடுத்துச் சென்றார். பிறகு அவர் முஸ்லிமாக மதம் மாறியதுடன், 3 குழந்தைகளையும் முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதும் எனக்கு தெரிய வந்தது. தாயான என்னுடைய சம்மதம் இல்லாமல் பிள்ளைகளுக்கு நடந்த மதமாற்றத்தை விலக்கம் செய்ய வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த மலேஷிய நீதிபதி லீ ஸ்வீ செங், தாயின் ஒப்புதல் இன்றி நடந்த இந்த மதமாற்றம் செல்லாது, சட்டவிரோதமானது என்று கூறி அந்த மூன்று குழந்தைகளின் மதமாற்றத்தை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது என்னது புதிய தீர்பாக இருக்கே..
ReplyDeleteஇப்படிப்பட்ட விடயங்களுக்கும் வழக்கு தொடர்ராங்களா?
என்ன உலகமப்பா இது????????????