போதைப் பொருளுக்கு எதிராக போராட ஜம்மியத்துல் உலமாவுக்கு அழைப்பு
இலங்கையில் செயற்படும் போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் பிரபலமான தரப்பினர் தொடர்பில் விரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தவுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொலன்னாவ நகர மத்தியில் நேற்று இடம்பெற்ற பொதுபல சேனாவின் பேரவைக் கூட்டத்தின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்
நாங்கள் பிரிவினை வாதம் தொடர்பாக பேசும் போது சிலருக்கு வருத்தமாக இருக்கின்றது. அப்படியான ஒருவர் இந்த பகுதியிலும் இருக்கின்றார். ரேனுக பெரேரா. கொலன்னாவ போன்ற பகுதியில் இப்படியான அரவாணிகள் பிறக்கின்றார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 13 வது அரசியலமைப்பு திருத்தில் உள்ள பாதகங்களை நாங்கள் எடுத்துக் கூறினோம். ஆனால் இந்த ரேனுக பெரேரா மாத்திரம், கூறுகிறாராம்.. பொதுபல சேனா என்பது காலத்தை வீணடிக்கும் ஒரு தரப்பு என்று.
அதேபோன்று இந்த பகுதியில் இருக்கின்ற பெண் அரசியல்வாதி கூறுகிறார், பௌத்த பிக்குவே!! விகாரைக்கு சென்று என்னவென்றாலும் செய்து கொள்ளுங்கள் என்று. அவர் பெயரைக் கூறினாலும் பரவாயில்லை .. அசோகா லங்காதிலக்க.
யுத்தத்தை பார்க்கிலும் பாரிய அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில் இலங்கை மக்கள் நாளுக்கு நாள் அழிந்து போவதை தவிர்க்க முடியாது. எனவே, அதில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
கத்தோலிக்க பேராயர், ஜம்மியத்துல் உலமா சபை ஏன்பனவும் போதைப் பொருளுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். இதற்கான அழைப்பை விடுக்கிறோம். அந்தவகையில் அரசியல் தரப்பினரும், பௌத்த பிக்குமாக அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கொத்தாக செயற்படவுள்ளதாவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பருப்பு எப்போதும் வேகாது.
ReplyDeleteபார்போம் என்ன நடக்க போகின்றது என்று
namma paarththu konde irukka vendiyathu thaan..
ReplyDeleteகண்டிப்பாக இந்த அழைப்பையேற்று ஜம்இய்யதுல் உலமா போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராகச் செயற்பட முன் செல்ல வேண்டும்.
ReplyDeleteஅதற்காக வீதிகளில் ஆர்ப்பாட்டம், கீர்ப்பாட்டம் என்று பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்காமல் அறிவு பூர்வமாக பொது பல சேனாக்களுடன் இணைந்து போதை ஒழிப்புக்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.
போதைப் பொருட்களில் கஞ்சா, குடு, தூள், லேகியம் என்று மட்டுமில்லாது சாராயம், விஸ்கி, விறண்டி போன்ற குடிபானங்களும் இருப்பதை பல சேனாக்களுக்குத் தெளிவு படுத்தி முதலில் பகிரங்கமாக அரசாங்க அனுமதியுடன் இடம்பெறும் இந்த சாராயம், விஸ்கி, விறண்டி போன்றவற்றை நாட்டில் இல்லாதொழிப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பைக் கோர வேண்டும்.
இவ்வாறான பகிரங்கப் போதை நிலையங்கள் ஒழிக்கப்பட்டால் தானாகவே மூலை முடுக்குகளில் இடம்பெறும் கஞ்சா, கோப்பி, குடு வியாபாரங்களும் நாட்டில் தலைமறைவாகிவிடும்.
இந்தத் தேரரின் பகிரங்க அழைப்பை நமது ஜம்இய்யதுல் உலமா கவனத்திற்கெடுக்காமல் புறக்கணித்தால், பின்னர் நாட்டின் தலைவர் 'முஸ்லிம்களும், அவர்களின் உலமாக்களும்தான் இந்த நாட்டில் போதை வஸ்துப் பொருட்களை விற்பதிலும், பாவிப்பதிலும் ஊக்கமளிக்கிறார்கள்' என்று எங்காவது சந்தர்ப்பத்தைப் பார்த்து குண்டைத் தூக்கிப் போடுவார்.
எனவே இந்த அழைப்பை ஏற்று சமயோசிதமாக காரியம் சாதிக்க வேண்டியது அழைப்புக்குரிய ஜம்இய்யாவின் கடமையாகும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
idhu thewaya engalukku...ulama sabai awargalin welaya mattum paarkattum....poda orul olippadai arasangamum,police um parkkattum...adatkuthane awargal irukkirargal....markka widayaththai parppathai wittu ulama sabai inawada amaippana bbs udan sernthal emakku than awamanam...engalukku antha pirachchinai thewei illai...naam emadhu welayei parppom,....podai porul olippadu polce inadum arasangaththinadhum welai..adatku than awarga irukkirrga...
ReplyDeleteWell said Vaarauraikal!
ReplyDeleteI agree with vaarauraikal's statement. I strongly suggest Jam'Iyathul Ulama to accept their invitation. Drugs and Druglords have to be wiped-out of Sri Lanka. No matter who that is. This is not only for the sake of our country, but also for the future of our young generation, including Muslims.
ReplyDeleteபோதைபொருள் சம்பந்தமாஹா கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும் எல்லத்தையும் நிறுத்தனும் முஸ்லிம்களாகிய நாம் முடிவு எடுக்க இது ஒரு சந்தர்ப்பம் போராட வேண்டும் இதட்கு முஸ்லிம்களும் ஒன்று படவேண்டும்
ReplyDeleteகொமன்ட் செய்து புத்திமதி கூற வந்த வார உரைகல் ஆசிரியராகிய அவர் புகை பிடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
ReplyDeleteவிடயம் என்னவோ நல்லவிடயம்தான் ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றுக்கருத்துக்களை அள்ளிவீசும் பொதுபலசேனவை நம்பி யார் இறங்குவது? நாளை நம்மை வேறொன்றில் மாட்டிவிடமாட்டான் என்பதற்கு எது உத்தரவாதம்?
ReplyDeleteஅரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் போதைப்பொருள் வர்தஹத்தை முதலில் ஒழிக்க வேண்டும்.அரசாங்கம் அனுமதிபத்திரம் வழங்குவதை போதுபலசெனா தடுக்கவேண்டும்.அதற்கு அவர்கள்தான் அழுத்தம் கொடுக்கவேண்டும்.
ReplyDeleteஇந்த பொதுபல சேனை என்ற தீவிரவாத மத அமைப்பு தற்போது தான் அறிவுபூர்வமாக நாட்டில் ஒரு முக்கிய விடயத்துக்காக நமது உலமாக்களை அழைத்திருக்கின்றது. நமது நாட்டில் பரவலாக முஸ்லிம்கள் தான் இந்த போதைப் பொருள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுவதாக பௌத்த மற்றும் தீவிரவாத அமைப்புகளும் சிங்கள ஊடகங்கள் மூலம் குற்றஞ் சாட்டி வரும் வேளையில் இந்தக் குற்றச் சாட்டுக்களைப் பொய்ப்பிக்க உறுதுணையாகவும் நமது இஸ்லாமிய மார்க்கம் இவ்வாறான மாபாதகச் செயல்களை ஏனைய மதங்களை விடவும் தீவிரமாக அறவே வெறுத்து ஒதுக்கும் செயல்களாக கருதுவதனாலும் நாட்டில் சமூக நல திட்டங்களுக்கு என்றும் நாம் துணை நிற்க வேண்டிய பாரிய பொறுப்பு நமது உலமா சபைக்கு இருப்பதனாலும் பொதுபல சேனாவின் இந்தக் கோரிக்கைக்கு நாம் செவி சாய்ப்பதால் எந்த ஊறும் விளையாது என்பது எனது அபிப்பிராயமாகும். முஸ்லிம்களின் உரிமைகளில் தேவையின்றித் தலையிடும்போது இந்த சேனையை எதிர்க்கும் அதே வேளை பொது நலத்திட்டங்களில் நமது பங்பளிப்பை நல்குவதால் நல்லதொரு எதிர்கால மாற்றத்தினையும் எதிர்பார்க்கலாம்.
ReplyDelete