சவூதி அரேபியாவில் எத்தியோப்பிய நாட்டு பணியாளர்களுக்கு தடை
(Tn) எதியோப்பிய நாட்டவர் களை வேலைக்கு அமர்த்து வதை சவூதி அரேபியா தற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த புதன்கிழமை தொடக்கம் எத்தியோப்பிய பணியாளர்கள் சவூதி நுழைவது தடை செய்யப் பட்டுள்ளது.
சவூதி உள்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் எத்தியோப்பிய நாட்டவர்களுக்கு தற்காலிக தடை விதிக்க இணங்கியதாக சவூதி அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எத்தியோப்பிய நாட்டு வீட்டு பணிப்பெண்கள் சிறுவர்களை கொன்ற சம்பவங்களை தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாத ஆரம்பத்தில் ரியாதில் 11 வயது சிரிய நாட்டு சிறுமியை எத்தியோப்பிய வீட்டுப் பணிப்பெண் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக கடந்த மாதம் 26 வயது எத்தியோப்பிய நாட்டு வீட்டுப் பணிப்பெண் தனது முதலாளியின் 6 வயது மகளை மூச்சடைக்கவைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இச்சம்பவங்களை தொடர்ந்தே ஆபிரிக்க நாட்டிலிருந்து பணியாளர்கள் வரவழைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment