Header Ads



முஸ்லிம் பாடசாலையில் திடீரென முளைத்த புத்தர் சிலை (படங்கள் இணைப்பு)


(நஷஹத் அனா)

ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்தரைச்சேனை அஸ்ஹர் வித்தியால விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (30.06.2013) திடீர் என புத்தர் சிலை முளைத்துள்ளதால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. 
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலம் என்பவற்றுக்கு உள்ள ஓரே விளையாட்டு மைதானம் இம் மைதானமாகும் இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.

கடந்த 01.03.2010ம் திகதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக் காணி புத்த ஜயந்தி விகாரைக்குறிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக் கூடாது என்றும் கூறியதற்கிணங்க பாடசாலை நிறுவாகத்தால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு இது தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவனைகள் இடம் பெற்றதன் பின்னர் நீதி மன்றத்தால் விகாரைக்குறிய இடம் அல்ல என்றும் பாடசாலை மைதானம் என்று சுற்றிக் காட்டி 25.06.2013ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்று அதிகாலை (01.07.2013) மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில்  மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

6 comments:

  1. காத்தான்குடிக்கு பொது பல சேனாவை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அழைத்து வரும்போது இதனையும் காட்டுங்கள்!

    ஆமாம்.. நேற்று முன்தினம் ஆசாத் சாலியின் வருகைக்கு எதிராக ஓட்டமாவடியில் மட்டைகள் தூக்கி நின்ற அட்டை வீரர்கள் எங்கே போனார்கள்..?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. வர வர புத்தரை பெளத்த மக்கள் காமெடி பீசா ஆக்கிட்டாங்க ஆங்காங்கே திடீரென முளைப்பதற்கு புத்தர் சிலையென்ன ஆப்பிள் செடியா?

    தவறுதலாக நம்பிக்கைகொண்டோரின் செயற்பாடுகளுக்கு ஒரு எல்லையே இல்லையா? இல்லையா? இல்லையா?

    ReplyDelete
  3. தென்கிழக்கிலங்கைப் பிரதேசத்தில் முற்றாக மூடப்பட்ட “படி” வாகனத்துள் புத்தர் சிலைகள் நிரப்பப்பட்டு உலாவி வருவதாகவும், அட்டாளைச்சேனையில் உள்ள ஒரு உணவகத்திற்கருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த காணப்பட்ட வாகனத்தை பிரதேச ஆட்கள் ஓரிருவர் சந்தேகத்தில் ஊடுருவிப் பார்த்த போது குறித்த வாகனம் அடையாளம் காணப்பட்டதாகவும், நிலைமை பரபரப்படைவதை உணர்ந்த வாகன சாரதி அவசர அவசரமாக வாகனத்தை எடுத்துக் கொண்டு அக்கரைப்பற்றுப் பக்கமாக விரைந்ததாகவும் மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்.
    மட்டுமல்லாது அக்கரைப்பற்றிலுள்ள ஜும்ஆ பட்டணப்பள்ளிவாயல் உட்பட பல பள்ளிவாயல்களுக்குள் “புராவஸ்த்து” தேடும் தோரணையில் அடிக்கடி இராணுவத்தினர் அத்துமீறி வருவதாகவும் அறியக் கிடைக்கின்றது. அக்கரைப்பற்றின் ஸம்சுல் உலூம் வித்தியாலயத்திற்கருகில் உள்ள பள்ளிவாயல் வளவுக்கும் இராணுவத்தினர் திடீரெனப் புகுந்து மடுத் தோண்டியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
    இன்னும், அச்சம் நிலவிய காலத்தில் அக்கரைப்பற்றில் இருந்த ஒரு சில சிங்களக் குடும்பங்கள் கிரயமாக விற்றுவிட்டுச் சென்ற காணி நிலங்கள் பற்றிய தகவல்களை இராணுவத்தினர் ஓரிரு நாட்களாகத் திரட்டிவருவதாகவும் மக்கள் விசனப்படுகின்றனர்.
    இது எல்லாவற்றிற்கும் மேலாக ரோமாபுரி பற்றி எரிகின்ற போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதையாக தென்கிழக்கின் அமைச்சரவை அமைச்சர் தொலைக்காட்சியில் “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” என்று பாட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றார்.

    ReplyDelete
  4. இனியென்னா திடீரென முளைத்த விக்ரத்தை திடீரென மண்ணுக்குள் போட்டு மூடிவிடவெண்டியது தான்.

    ReplyDelete
  5. முஸ்லீம்களே இப்போதாவது கண்களை திறக்கவும்

    ReplyDelete
  6. ithu thandikkappada vandiya vidayam

    ReplyDelete

Powered by Blogger.