Header Ads



வடமாகாண சபையில் போட்டியிடவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முழு விபரம்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 பெண் வேட்பாளர்கள் உள்ளிட்ட 51 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளது. 

இன்று 29-07-2013 சமர்ப்பிக்கப்படவுள்ள வேட்பாளர் பட்டியல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மொத்தம் 51 வேட்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.  தமிழரசுக் கட்சியின் சார்பில் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஒருவருமாக மொத்தம் மூன்று பெண் வேட்பாளர் போட்டியிடவுள்ளனர். 

விடுதலைப் புலிகளின் திருகோமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி யாழ். மாவட்டத்திலும், கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை வினுபானந்தகுமாரி கேதுரட்ணம் கிளிநொச்சி மாவட்டத்திலும், மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் மேரிகமலா குணசீலன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர். 

மன்னார் மாவட்டத்தில், தமிழரசுக் கட்சி சார்பில் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் நளீமி என்ற முஸ்லிம் வேட்பாளர் களமிறக்கப்படவுள்ளார்.

மாவட்ட ரீதியாக வேட்பாளர்களின் விபரம்-

யாழ்ப்பாணம் 

சி.வி. விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்), சீ.வீ.கே.சிவஞானம்,பா.கஜதீபன், ச. சுகிர்தன், எ.ஆனந்தி, எஸ்.சயந்தன், எஸ். பரம்சோதி, எஸ். சிவயோகம், ஆர்.ஆர்னோல்ட், எம். கே..சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், எஸ். குகதாஸ், த.சித்தார்த்தன், த.தம்பிராசா, க. தர்மலிங்கம், எஸ்.சர்வேஸ்வரன், எஸ்.ஜங்கரநேசன், ஆர்.ஜெயசேகரம், என்.வி. சுப்பிரமணியம். 

கிளிநொச்சி 

வீ. ஆனந்தசங்கரி, த.குருகுலராஜா, ப.அரியரட்ணம், க.திருலோகமூர்த்தி, கே.வினுபானந்தகுமாரி, சு.பசுபதிப்பிள்ளை, பூ.தர்மகுலசிங்கம் 

முல்லைத்தீவு 

அ.ஜெகநாதன், து.ரவிகரன், வீ.கனகசுந்தரசுவாமி, சி.சிவமோகன், வ.கமலேஸ்வரன், க.சிவநேசன், ஆ.புவனேஸ்வரன், கமலா குணசீலன் 

வவுனியா 

எம்.தியாகரசா, க.லிங்கநாதன், ப. சத்தியலிங்கம், எம்.பி நடராஜ், து. நடராஜாசிங்கம், க.சந்திரகுலசிங்கம், இ. இந்திரராசா, மு. முகுந்தரதன், செ. மயூரன் 

மன்னார் 

ஞா.குணசீலன், யோ. ஆனந்தன்குரூஸ், சு.சிவகரன், பா.டெனிஸ்ரன், சு.பிறிமோஸ் சித்ராய்வா, கி. விமலசேகரம், இ.சாள்ஸ், ஆயூப் அஸ்மி.

No comments

Powered by Blogger.