எகிப்துக்கு அமெரிக்கா வழங்க இருந்து போர் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
அமெரிக்க அரசு எகிப்து நாட்டிற்கு கூடுதலாக வழங்க இருந்த நான்கு 'எப்-16' ரக போர் விமானங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.
கடந்த 3-ந்தேதி எகிப்து அதிபர் முகமது மோர்சி, ராணுவத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதுமுதல் ராணுவத்தினருக்கும், மோர்சி ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கலவரமும், அமைதியின்மையும் பரவியுள்ள இந்த நிலையில், எகிப்துக்கு கூடுதல் போர் விமானங்களை அளிப்பது தகுந்த செயலாக இருக்காது என்று பெண்டகன் தகவல் அதிகாரி ஜார்ஜ் லிட்டில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அமெரிக்கா- எகிப்து குறித்த பாதுகாப்பு உறவு இதனால் பாதிக்கப்படாது என்றும், பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பபுச் செயலர் சுக் ஹேகல், நேற்று எகிப்தின் ராணுவத் தலைவர் அப்டெல் பெட்டா அல் சிசியிடம் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அதிபர் பாரக் ஒபாமா போர் விமானங்கள் வழங்குவதை ஒத்திப்போட்டதற்கான காரணங்களைக் குறித்து லிட்டில் விளக்கவில்லை. இந்த முடிவை எடுக்க வேண்டியது முக்கியம் என்று கருதிய அமெரிக்க தலைமை, எகிப்து நாடு விரைவில் ஜனநாயக வழியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment