Header Ads



ஆசிரியையை முழந்தாளிடவைத்த அரசியல்வாதிக்கு மீண்டும் விளக்கமறியல்


நவகத்தேகம பாடசாலை ஆசிரியையை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் 27ஆம் திகதி 5,000 ரூபா ரொக்க பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் இவர் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும் பிணை நிபந்தனைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் கவனத்த்திற்கு இன்று வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டதை அடுத்து, அவரை ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கடந்த ஜுன் 27ஆம் பிணையில் விடுவித்த ஆனமடுவ நீதவான், சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவேண்டாமெனவும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிடுமாறும்; நிபந்தனை விதித்திருந்தார்.

இதேவேளை, முழந்தாளிடப்பட்ட ஆசிரியையும் அவரது கணவரையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tm

1 comment:

Powered by Blogger.