Header Ads



மிரட்டுகிறார் விமல் வீரவன்ச

காணி, காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட சில முக்கியமான விவகாரங்கள் குறித்து துரிதமாக தீர்வு காணத் தவறினால், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து விலகி விடுவேன் என்று எச்சரித்துள்ளார் அமைச்சர் விமல் வீரவன்ச. 

தேசிய சுதந்திர முன்னணியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், 

“இரண்டு அல்லது அதைவிட அதிகமான மாகாணசபைகளை இணைப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.  அத்துடன் காணி, காவல்துறை அதிகாரங்கள் தொடர்பாகவும் தெரிவுக்குழு உடனடியாக ஆராய வேண்டும். 

இவை குறித்து முன்னுரிமை கொடுத்து, துரிதமாகவும், கலந்துரையாடத் தவறினால், தெரிவுக்குழுவில் பங்கேற்பதில் அர்த்தமில்லை.  அடுத்த மூன்று அல்லது நான்கு அமர்வுகளில் இந்த முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆராயப்படவில்லையென்றால், தெரிவுக்குழுவில் இருந்து விலகிவிடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. summmma poonga wansa
    ithuvum UNNAVIRATHAM MAATHIRIYA?

    ReplyDelete
  2. எல்லாத்திலயும் இருந்து விலகி பழையபடி எங்கயாவது போய் பிச்சையெடு.

    ReplyDelete
  3. இவன் அரசை மிரட்டி மிரட்டியே கதிரையில் அமர்ந்து கொண்டிருக்கிறான்.
    இம்முறை இவன் உண்ணும் விருதம் இருப்பான் போல...

    ReplyDelete
  4. உண்மையான பௌத்தன் , இப்படி ஒரு முஸ்லிமை தேடுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.