Header Ads



மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பில் நடைபெற்ற நாடகம்..!

மஹியங்கனை பள்ளிவாசல் பல வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் ஒரு பள்ளிவாசல் என்பது சகலரும் அறிந்த விடயம். மர்ஹும் அஷ்ரப் உள்ளிட்ட பலர் அங்கும் தொழுதும் உள்ளார்கள். பள்ளிவாசல் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டதா இல்லையா என்ற வாதங்களைவிட அங்கு பள்ளிவாசல் இருந்துள்ளது. ஜும்ஆ உள்ளிட்ட இறை வணக்க வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன என்பதே பிரதானமானது.

அப்பள்ளிவாசல் ஸ்த்தாபகரும், பள்ளிவாசல் தலைவருமான சீனி முஹம்மது ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இறுதியாக தொலைபேசியில் கதைக்கும்போது கூட அப்பள்ளிவாசல் குறித்து கண்ணீர் மல்கியிருந்தார்.அப்படிப்படட்டவரா மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லையென கடிதம் எழுதினார் என ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும்  கேள்விகள் எழுவதில் நியாயமுள்ளது.

பௌத்த சாசன அமைச்சிற்கு அவர் எழுதிய கடிதமும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் 28-07-2013 வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தக் கடிதம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு அப்படியே தருகிறோம்.

இந்த விவகாரங்களில் மேல் மட்டத்திலிருந்து கையாளப்பட்டிருப்பதாக அறியவருவதுடன், அங்கிருந்தே தமிழ் மொழிபெயர்ப்பு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளது. இதில் முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார்.

தினகரன் வாரமஞ்சரியில் பள்ளிவாசல் பற்றிய, அப்பள்ளிவாசல் தலைவரின் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வெளியாக முன்னரே, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இலங்கை நேரப்படி சனிக்கிழமை, 27-07-2013 அன்று மாலை 6 மணியளவிலேயே இவ்வாறான ஒரு கடிதம் தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்தது.

இவ்வாறான ஒரு கடிதம் வெளியிடப்பட்டதன் பின்னர் தம்மை சந்திக்கவுள்ள ஆளும்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மஹியங்கனையில் பள்ளிவாசல் இருக்கவில்லை என அந்தக் கடிதத்தையும், பத்திரிகைச் செய்தியையையும் காண்பிப்பதே இங்கு நோக்கமாக இருந்துள்ளது. அதற்கேற்பவே தற்போதுவரை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லை என்ற பிரச்சாரம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. வேடுவர் தலைவர் உள்ளிட்ட பௌத்த குருக்களும் இந்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பிரச்சாரத்திற்கு வலுசேர்ப்பதாகவே சீனி முஹம்மது பெயரில் வெளியாகியுள்ள கடிதமும் அமையப்போகிறது.

அதேநேரம் பள்ளிவாசல் தலைவரின் இந்த செய்தி வெளியானதிலிருந்து அவருடன் தொடர்புகொள்ள ஜப்னா முஸ்லிம் இணையம் 15 க்கும் மேற்பட்ட தடவைகள் முயன்றது. அவரின் கையடக்க தொலைபேசியில் ரிங் ஒலிக்கிறதே தவிர, மறுபக்கத்தில் எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.

மஹியங்கனை பள்ளிவாசல் பதிவுசெய்யப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக அது பள்ளிவாசலாக பயன்படுத்தப்படவில்லை என்பது சுத்தப்பொய். அந்த அல்லாஹ்வின் இல்லத்தின் சுஜுது செய்த பலர் இதற்கு ஆதாரமாக உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக மஹியங்கனையில் பள்ளிவாசலே இல்லையென கூறவருவது முற்றிலும் கணடிக்கத்தக்கது எனலாம்.!

இங்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எங்களிடம் ஒருமுறை கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். நாட்டில் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களைவிட, பதிவு செய்யப்படாத பௌத்த விகாரைகளே அதிகம் என்பதாகும்..!

15 comments:

  1. இதுவும் கடந்து போகும் அல்லாஹ்வின் பக்கம் நிச்சயம் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யும் அவனை மீறி எதுவும் நடக்கப்போவதில்லை. பிரார்த்திப்போம் அதுதாம் எங்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம்.

    ReplyDelete
  2. இந்த ஆட்டம் நீண்ட நாளைக்கு நீடிக்காது Mr.MR & Co. இந்த புனிதமான மாதத்தில் எங்களுடைய துஆகளுக்கு அல்லாஹ் நிச்சயம் பதில் அளிப்பான்..!!

    ReplyDelete
  3. Seeni Muhaman may be threaten to send a letter like...

    ReplyDelete
  4. இதை நாம் விட்டிக் கொடுக்க முடியாது. அப்படி விட்டுக் கொடுத்தாள் இப்படியான நிகழ்வு மேலும் பள்ளிவாசல்களை மூடும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  5. Lie fights, argues, qurrels, compacts with ture always, it's a world policy.

    ReplyDelete
  6. Let's just agree for a moment that there are a few number of mosques that are not registered.
    What should be done then? What did they do to unregistered pharmacies?Unregistered
    eateries?unhygienic eateries?Death sentence? Responsible govts inform them to register.There
    are plenty of businesses that are not registered.What about attacks and warnings to muslim
    businesses?Unregistered?What muslims fail to ask from the authorities is,who are these thugs
    warning and threatening them in day light with the police looking on and their complaints not
    investigated?

    ReplyDelete
  7. மர்ஹூம் அஷ்ரஃப் தொழுதிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு வாதமேயல்ல. சகோ. முஸம்மில் மேலே சொல்லியிருக்கும் கருத்துத்தான் சரியானது. பொறுப்புள்ள ஆட்சியாளர்கள் தமது கடப்பாடுகளை மறந்து விட்டார்கள்.. இல்லை தூங்குவது போல் நடிக்கிறார்கள். ஏனென்றால், சூடு சொரணையில்லா அரசியல் தலைமைகளை நம்பியிருக்கும் சமூகமாக நாம் இருக்கிறோம் பாருங்கள்! இந்தத் தலைமைகளை முகம் குப்புற வீழ்த்தினால்தான் விடிவு வரும். அதைச் செய்ய வேண்டுமென்று அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம் இந்தப் புனிதமான ரமளானின் கடைசிப் பத்தில். யா அல்லாஹ்! இந்த சொரணையில்லா தலைவர்களை அரசியலிருந்து ஒழித்துக் கட்டி உன்னுடைய ஏகத்துவத்தின் பக்கம் அவர்கள் திரும்ப அருள் புரிவாயாக!

    ReplyDelete
  8. masha allah
    the protector who know how to protect the history of the Abhraha and his elephant force.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்.....
    பள்ளிவாசல் பதிய்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக பள்ளிவாலினால் செலுத்தப்படும் மின்சார பட்டியல் அல்லது நீர் பட்டியல் ஆராய்வதன் மூலமாக பள்ளிவாசல் இயங்கியது என்பதனை உறுதிப்படுத்தலாமா என பரிசீலனை செய்யலாமா என எண்ணத்தோனுகின்றது.

    ReplyDelete
  10. Use dua and your vote as a weapon! Don't make any more comments please!

    ReplyDelete
  11. Who is this deputy minister?

    ReplyDelete
  12. Hassbiallahi wanihmal wakeel.

    ReplyDelete
  13. assalamu alaikkum iknow about this mosqe I am from pangaragammana y al haj seeni mohammed say like this iant believe this subject.from dubai

    ReplyDelete
  14. மஹியங்கனையில் பள்ளிவாசல் ஒன்று இல்லை என்றால் எதனையாம் அவர்கள் மூடியது

    அப்படியென்றால் வேடத்தலைவர் கூறிய பள்ளி எதாம்?

    ReplyDelete
  15. இவ்வளவு காலமும் இப்படியானதொரு இழிவான செயல்கள் நடந்ததேயில்லை எப்ப ம,ப,கோ, சால்வைக்காரர்கள் வந்தாரகளே அன்று தொட்டது பண்றிதின்பவரகளுக்கு அதே மைண்ட்தான் எம்இனத்தவர்கள் ஒற்றுமையாகஇல்லையோ ஆளுக்கு ஒருகதிரையும் வாகனமும் சொகுசான வாழ்க்கைக்காக காட்டிக்கொடுத்து கட்சியை வளர்க்கிறார்கள் எப்பதான் எமதுசமுதாயம் திருந்துமே யாஅல்லாஹ் எல்லாம் நீஅறிந்வன் ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.