தற்காலத்தில் தஃவாக்கான ஊடகம் அழகிய நற்பண்புகளே...!
இஸ்லாம் நற்பண்புகளுக்கு அதீத முக்கியத்துவத்தை வழங்குகின்றது. அழகிய பண்பாடுகள் மூலமாகத் தான் மனித சமூகம் உன்னத சமூகமாக, மேம்பட்ட சமூகமாக தலைநிமிர்ந்து வாழ முடியும் என வலியுருத்துகின்றது. வெறுமனே இஸ்லாம் பண்பாடுகளை கோட்பாட்டளவில் மாத்திரம் குறிப்பிடாமல் அதனை நடைமுறை ரீதியாகவும் உண்மைப்படுத்தியிருக்கின்றது.
சூரா அல் முஃமினூனின் ஆரம்ப வசனங்கள் வெற்றி பெற்ற விசுவாசிகளின் பண்புகளைக் குறிப்பிடுகின்றது. ஆரம்பமாக இபாததத் பற்றி குறிப்பிட்டு தொடர்ந்து வரும் வசனம் அக்லாக் - நற்பண்புகள் பற்றியே அமைந்துள்ளது. தொடர்ந்து வரும் வசனமும் இபாதத் பற்றி குறிப்பிட்டு அதற்கடுத்தாற்போல் பண்பாடு பற்றி பேசுவதை அவதானிக்க முடியும். எனவே எல்லா இபாதத்களினதும் விளைவுகள், பிரதான நோக்கங்கள், பண்பாடுகள் மேலோங்க வேண்டும் என்பதாகவே அமையப்பெற்றுள்ளன. அதாவது இபாதத்களின் மூலமாக பண்பாடுகள் செழுமைப்படுத்தப்பட்டு வெறுக்கத்தக்க தீங்கான விடயங்கள் களையப்பட வேண்டும் என்ற தார்மீக நோக்கம் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது, உதாரணமாக தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.
'தொழுகையை நிலைநிறுத்துவீராக. நிச்சியமாக தொழுகை மானக்கேடானவற்றிலிருந்தும் தீமையிலிருந்தும் தடுக்கின்றது.' இதனடிப்படையில் அல்லாஹ் தனது மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநாட்டும் பொறுட்டும் பண்பாடுகளை போபதிப்பதற்காகவும் நபிகளார் (ஸல்) அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பினான்.
'கல்வியறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களிலுள்ள ஒருவரை அவன் தன்னுடைய தூதராக அனுப்பி வைத்தான். அவகள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்தபோதிலும் அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்கான்பித்து அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றான்.' (அல் ஜும்ஆ : 2)
மேலும் நபி (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு நபியாக அனுப்பபட்டமைக்கான நோக்கத்தினை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.
'நிச்சியமாக நான் நற்பண்புகளை பரிபூரணப்படுத்துவதற்காகவே அனுப்பப்டடுள்ளேன்.' இவ்வாறு குறிப்பிட்ட நபிகளார் (ஸல்) பண்பாடுகளின் அவசியத்தை பல்வேறு வழிகளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். 'உங்களில் பரிபூரண ஈமான் கொண்டவர் பண்பாட்டில் மிகவும் சிறந்தவர் தான்.'
மேற்கூறிய ஹதீஸின் பிரகாரம் நற்பண்புகள் ஈமானின் பலத்தை அளவிடக்கூடிய அளவுகோலாகக் காணப்படுகின்றது. மாத்திரமல்ல மறுமையில் இந்நற்பண்புகள் எமது மீஸானை கனதியாக்ககக்கூடிய வல்லமை கொண்டதாக விளங்குகின்றது. 'மறுமையில் அடியான் தராசில் நற்பண்புகளை விட கூடியது எதுவும் கிடையாது.'
உண்மையில் நபிகளார் மேற்கூறிய கருத்துக்களை போதித்தது மாத்திரமின்றி அதனை தனது வாழ்க்கை முறையாக வாழ்ந்தும் காட்டினார்கள். சிறுவயது முதல் அல் அமீன், அஸ் ஸாதிக் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட அவர்களில் குடிகொண்டிருந்த நற்பண்புகளே பிரதான காரணமாகும். தமது தஃவா வாழ்க்கையின் போதும் எவ்வித துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் வந்த போதும் சிறிதும் தளராமல் தனது அழகிய பண்பாடுகளை வெளிக்காட்டியதன் மூலமாகத் தான் இஸ்லாம் வெகுவாகப் பரவ ஆரம்பித்தது. நபி (ஸல்)அவர்கள் தனது வாழ்வின் சகல துறைகளையும் நற்பண்புகள் மூலமாக அலங்கரித்தமையால் இஸ்லாத்தின் பால் மக்கள் ஆகர்சிக்கப்பட்டனர். அவர்களின் முழு வாழ்வும் அல் குர்ஆனை அடியொட்டியதாக அமையப்பெற்றிருந்தது, இது பற்றி ஆஇஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். 'அவர்களுடைய பண்புகள் அல்குர்ஆனாகவே இருந்தது' இதனடிப்படையில் சஹாபாக்கள்இ தாபியூன்கள்இ தபஅத் தாபிஈன்கள் தமது வாழ்வை அமை;துக் கொண்டனர். பிற்பட்ட காலங்களிலும்; சிறந்த பண்பாடுகள் மூலமாக பலர் இஸ்லாத்தை தழுவிய வரலாற்றைக் காணமுடியும்.
மேற்கு நாடுகள் தனது ஆயுத பலத்தால் உலக வளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த வேளை இஸ்லாம் மனித மனங்களை தனது பண்பாடுகளால் ஆகர்சி;துக் கொண்டிருந்தது. தாலிபான்களின் பண்பாடுகளைக் கண்ட பிரபல ஊடகவியலாளர் 'யுவான் ரிட்லீ' இஸ்லாத்தை தழுவுகி;ன்றார் என்றால் வாழ்வின் எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் ஓர் முஸ்லிமின் வாழ்வில் நற்பண்புகள் நிரம்பப்பெற்றுள்ளமையை அவதானிக்க முடியும்.
எனினும் கவலைக்குறிய விடயம் தஃவாவை செம்மைப்படுத்தக்' கூடிய பிரதான ஊடகமாகத' திகழும் அழகிய பண்பாடுகள் எம்மத்தியல் இன்று மிக மிக அரிதாக காணப்படுகின்றது. வாழ்வின் சகலதுறைகளிலும் பண்பாட்டின் சிகரங்களாக மிளிர வேண்டிய நாம் ஒரு துறையிலேனும் அடிப்படைப் பண்பாடுகளைக் கூட வெளிக்காட்ட முடியாமல் தவிக்கின்றோம். இஸ்லாம் நற்பண்புகளால் வளர்க்கப்பட்ட மார்க்கம் என்ற யதார்த்தத்தை உண்மைப்படுத்துவதை விடுத்து இஸ்;லாம் யுத்தங்களால் போராட்டங்களால் பரப்பப்பட்ட மாக்கம் என்ற அந்நியர்களின் விமர்சனத்திற்கு சான்று பகர்பவர்களாக நாங்கள் மாறியுள்ளோம்.
இன்று முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக எமது நாட்டில் தலைதூக்கியிருக்கும் கெடுபிடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பிரதான அடிப்படைக் காரணம் எமது அடுத்த சகோதரர்களோடு அடுத்த சமூகத்தவர்களோடு அடுத்த மனிதர்கனோடு பண்பாடற்ற அநாகரிகமான வாழ்க்பை; போக்கினை நாம் கடைபிடிபத்தமையே என்தை எவராலும் மறுத்துறைக்டக முடியாது. எமது தனிநபர் குடும்பம் சமூகம் என்ற அனைத்து மட்டங்களும் பொருளாதாரம், கல்வி, அரசியல் துறைகளில் எமது நற்பண்புகளை வெளிக் கொணர்வதை விடுத்து தார்மீகமற்ற முறையில் அற்ப இலாபத்திற்காக எமது தனித்துவத்தை இழந்து எமது பாரம்பரியத்தை இழந்தமையானது எமது பூர்வீகத்துக்கு இன்று வேட்டு வைத்துள்ளது.
இலங்கைக்கு வந்த இஸ்லாமிய அறிஞர் மௌலானா அபுல் ஹஸன் அலி அந் நத்வி அவர்கள் குறிப்பிட்ட கருத்து இங்கு நோக்கத்தக்கது,'இலங்கையில் தஃவாக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளது. நற்பண்புகள் எனும் வாயிலைத்தவிர' எனவே நற்பண்புகள் எனும் ஊடகம் மூலமாகத்தான் எமது தஃவாவினை சிறந்த முறையில் எத்pவைக்க முடியும். முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை, கலாச்சாத்தை பிரதிபலிக்க முடியும். அதற்குறிய அடிப்டைப் பணியாக புனித ரமலான் காலப்பகுதிகளில் எமது இஃப்தார் நிகழ்வுகளில் அன்னிய மத சகொதரர்களையும் இணைத்துக் கொள்வதன் மூலமாக சமூக நல்லிணக்கம் வளர வழிவகுப்போம்.
நபிகளார் (ஸல்) அவர்களின் உம்மதத்தினர் என்பதில் பெறுமைப்படுகின்ற நாங்கள் எமது வாழ்வின் சகல துNறைகளிலும் நற்பண்புகள் எனும் மிகப்பெறும் ஆயுதத்தினை அனிகலநாகக் கொண்டு சிறந்த பண்பாடுடையவர்களாகஇ அழகிய நற்பண்புகள் நிரம்பப் பெற்றவர்களாக ஆகுவதன் மூலம் எமது சமூகத்தின் தனித்துவத்தினையும் உண்மைத்தன்மையினையும் இவ்வுலகிற்கு பரைசாற்ற முடியும். மாத்திரமல்ல ஒவ்வொரு தனிமனிதனும் தூய இஸ்லாமிய பிரச்சார ஊடகமாக நற்பண்புகளை கைக்கொள்ள முடியும். இதன் மூலம் முஸ்லிம்கள் மீது நல்லெண்ணம் வளர்க்கப்பட்டு அவர்கள் பற்றிய விமர்சனங்கள் களையப்பட்டு இஸ்லாத்தின்பால் மக்கள் ஆகர்சிக்கப்பட்டு இந்த மார்க்கம் இவ்வுலகை ஆட்சி செய்ய வழிவகுக்கும். அதற்கு அல்லாஹுத்தஆலா எம் அனைவருக்கும் தெளிவான அறிவையும் சீரான சிந்தனையையும் வழங்குவானாக..!
Post a Comment