புதிய காதி நீதிபதியாக மௌலவி அலியார் பலாஹி நியமனம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் பிரதேசங்களுக்கான புதிய காதி நீதிபதியாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் காத்தான்குடிக்கான காதி நீதிபதி பதவிக்கான நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது.
காத்தான்குடிக்கான காதி நீதிபதியாக கடமையாற்றிய ஏ.எம்.ஹிழ்ர் ஜேபி தனது பதவியினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராஜினாமா செய்ததையடுத்து ஏறாவூர் காதி நீதிபதி மௌலவி எம்.ஏ.மஜீட் காத்தான்குடிக்கான பதில் காதிநீதிபதியாக இதுவரையிலல் கடமையாற்றி வந்தார்.
இந்நிலையியே; காத்தான்குடியின் புதிய காதி நீதிபதியாக மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நிமிக்கப்பட்டுள்ளார்.
இவர் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதி அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவருமான இவர் மூத்த அறிஞமாவார்.
கடந்த மாதம் இடம்பெற்ற காதி நீதிபதி நேர்முகப் பரீட்சைக்கு காத்தான்குடியிலிருந்து மூவர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
الحمد لله
ReplyDeleteபாராட்டப்பட வேண்டிய விடயம்.
இன்று அநேகமான பகுதிகளில் மார்க்க அறிவே இல்லாத , குர்ஆன் ஹதீஸை இஜ்மா கியாஸை பிரித்து அறிந்து கொள்ள முடியாத , அரபு மொழியே தெரியாத பட்டத்துக்கும்,பதவிக்கும் ஆசைப்பட்ட மார்க்க விடயத்தில் மடையர்களான ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்கள் தான் காழியாக பதவி வகிக்கின்றார்கள் .
இவர்கள் அனைவரையும் ஓடஓட விரட்டிவிட்டு அனைத்து விடயத்திலுமே தேர்ச்சி பெற்ற ஆலிம்களை முளு இலங்கையிலும் காழியாக நியமிக்க வேண்டும்.
ஆமாம். காத்தான்குடி நகர சபை வட்டிக்குப் பணம் எடுத்து வாகனம் வாங்கலாம் என பத்வா கொடுத்த காத்தான்குடி ஆலிம்களின் தலைவர்தான், இப்போது காழியாராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
ReplyDeleteஇவருக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட கழியாருக்கு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் தனது கடிதத் தலைப்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு சிபார்சுக் கடிதம் கொடுத்து நியமித்திருந்தது.
அவரோ 65,000 ரூபாவை நிதி மோசடி செய்து உள்ளுர் ஊடகத்தினால் அம்பலப்படுத்தப்பட்டு கடைசியில் குறுகிய காலத்திற்குள்ளேயே 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற கணக்காக காதி நீதிபதி பதவியை இராஜினாமாச் செய்து சரித்திரம் படைத்திருந்தார்.
இப்போது மாக்க அறிவுள்ள காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் பிரதி அதிபருமான இவர் காதி நீதிபதியாகப் பதவியேற்றிருக்கின்றார்.
மிகவும் தக்வாவுடன் செயற்பட்டு முழு உலமா சமூகத்தினதும் மரியாதையை இவர் காப்பாற்ற வேண்டும்.
உள்ளுர் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது.
முகவர்களை வைத்து பிணக்குகளைத் தீர்ப்பதாகக் கூறி கைகளை "நனைத்துக்" கொண்டு சுட்டுக் கொள்ளவும் கூடாது.
காத்தான்குடியில் மர்ஹும் எஸ்.எம்.எம். முஸ்தபா காதியார் காலத்திலிருந்து ஹாஜிகளான எம்.பி.எம். மீராசாஹிபு, எம்.ரி.எம். காலித், எம்.எம்.எம். மஹ்றூப் கரீம், ஏ.எம். ஹிழுறு என்று பல காதிமார்களின் செயற்பாடுகளை அவதானித்து வந்துள்ளேன். புதிய காதி நீதிபதியின் செயற்பாடுகளிலும் அவதானத்துடன் இருப்பேன்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-