'ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே அபிவிருத்தி இலக்கை அடையமுடியும்'
(இஸ்மத்)
கிழக்கு மாகாண சபையின் நிருவாகத்தை புதிதாக பொறுப்பேற்றதன் பின்பு இங்கு வாழும் 17 இலட்சம் மக்களின் அவிருத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் அவர்களது வாழ்கைத்தரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீர்மானங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் முடிந்த வரை தீர்க்கின்ற, தீர்வு கான்கின்ற ஒரு விசேட நடவடிக்கை தற்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம். என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக அக்கரைப்பற்றில் நடைபெற்ற அம்பாறை மாவட்டதிற்கான விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று அம்பாறை மாவட்டம் கிழக்கு மாகாணசபை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுகின்ற மிக முக்கியமான கூட்டத்தில் நாம் எல்லோரும் கலந்து கொண்டிருக்கின்றோம். நாளை இதே போன்ற ஒரு கூட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் சிந்தனைகள்; மூலம் இந்த மாகாணத்திலே வாழுகின்ற மூன்று இனமக்களுக்கும் முடிந்த வரையில் நாம் எல்லோரும் எம்மாலான சேவையினை செய்ய வேண்டும் என்பதே இதன் மூலமான எனது எதிர்பார்ப்பாகும்.
2013ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைக்காக மாகாண சபை மூலம் ஏறக்குறைய 7000 மில்லியன் ரூபாய் கல்வி, சுகாதாரம், வீதி, நீர்ப்பாசனம், விவசாயம், மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி மற்றும் ஏனைய அனைத்து துறைகளுக்குமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்காக 2726 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் முதலில் எங்களுடைய இணைந்த ஒற்றுமையான செயற்பாடுகள் முக்கியமாகும். இதன் மூலமே அபிவிருத்தி தொடர்பான குறித்த இலக்கை அடையமுடியும் என்பது எனது கருத்தாகும். கடந்த காலங்களிலும் தற்போதும் நமது மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு துறைகளுக்கும் பொறுப்பான கௌரவ அமைச்சர்களும், அதன் அதிகாரிகளும் முழு மூச்சுடன் காட்டிவருகின்ற அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் எனது பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இங்கே ஆராயப்படுகின்ற விடயங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அதிகாரிகள் மிக முக்கிய கவனம் எடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உங்களது தலையாயக்கடமை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மாகாண நிருவாகம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்ற இன்றைய காலகட்டத்திலேயே நாம் கலந்துரையாடல் மூலம் கால தாமதங்களை தவிர்த்து நேர்மையான திறமைமிக்க சேவைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு சளைக்காத வகையில் நமது மாகாணத்தையும் முன்னேற்ற முடியும் என்பதை நீங்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண சபையில் உள்ள 5 அமைச்சுக்களினதும் செயலாளர்களும், பிரதிப் பிரதம செயலாளர்களும், 19 திணைக்களத்தலைவர்களும் மற்றும் 45 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் இணைந்து செயலாற்றினால் நிச்சயம் நமது மாகாணம் வளங்கொழிக்கும் பூமியாக எதிர்காலத்தில் மற்றமடையும் என்பதை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இந்த நாட்டின் துரித அபிவிருத்திக்காக பல்வேறு ஆக்க பூர்வமான சிந்தனைகளுடன் செயலாற்றும் ஜனாதிபதி அவர்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்து எதிர்காலத்தில் சிறப்பான செற்பாட்டுக்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பினையும் ஆக்க
பூர்வமான பங்களிப்பினையும் எதிர் பார்கின்றேன். முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பூர்வமான பங்களிப்பினையும் எதிர் பார்கின்றேன். முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதை எல்லாம் அரசுக்கு ஜால்ரா அடிகிர தூங்கு மூஞ்சி எல்லாம் சொல்லக் கூடாது
ReplyDeleteஅதென்னவே, இதுகளுக்கு மட்டும் கண் விளித்து விட்டீர்
ReplyDeletePaarra Paarra jock Adikkiraarraa,,,,,,,,,,,,, Eappading Ungalukku mattum kanakka timeikku Varuthu,,,,,
ReplyDelete