Header Ads



தலை சிறந்த இஸ்திக்பார்

(மக்தூம்)

اللَّهُمَّ أَنْتَ رَبِّى ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ ، وَأنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوءُ بِذَنْبِي ، فَاغْفِرْ لِي ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

'அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த, கலக்தனீ, வ அன அப்துக, வ அன அலா அஹ்திக வ வஅதிக மஸ்ததஅத்து, அஊது பிக மின் ஷர்ரி மா  ஸனஅத்து, அபூ உ லக பி நிஅமதிக அலைய, வ அபூ உ பி தன்பீ. ஃபக்ஃபிர்லீ, ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துனூப இல்லா அன்த. 

(பொருள்: இறைவா! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்ற கடமைப் பட்டுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். 

 நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. 

ஒருவர் உறுதியுடன் மாலை நேரத்தில் இதைச் சொல்லிவிட்டு காலைப் பொழுதை அடைய முன் (அன்று மாலையே) அவர் இறந்து விட்டால்  அவர் சொர்க்கம் சென்றிடுவார்.  அதே போன்று உறுதியுடன் காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு மாலைப் பொழுதை அடைய முன் அன்று பகலிலேயே இறந்து விட்டால் அவரும் சொர்க்கம் சென்றிடுவார் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவித்தவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) ,   ஆதாரம்: புகாரி  

No comments

Powered by Blogger.