இஸ்லாமிய பெண்கள் எழுச்சி மாநாடு
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
கோணாவத்தை,அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய பெண்கள் எழுச்சி மாநாடு 27.07.2013 அமைப்பின் உ.ப.தலைவர் மௌலவி எம்.ஏ.முபீன் ஸஹ்வி தலைமையில் ஜம்இய்யா வளாகத்தில் இடம் பெற்றது.
இம் மாநாட்டில் கிழக்கிழங்கையின் தலைசிறந்த உலமாக்கள் கலந்து கொண்டு மார்க்க சொற்பொழிவுவாற்றினர்.
சுவர்க்கத்தை ஆசித்து நரகத்தை தவிர்த்தல் எனும் தலைப்பில் கிழக்கு பழ்கலை கழக விரிவுரையாளர் எஸ்.எல்.எம்.நஷ்மல் பலாஹி அவர்களும் 'இஸ்லாமிய அழைப்புப் பணியில் பெண்களின் பங்கு' எனும் தலைப்பில் விஷேட உரையினை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி உரையாற்றினார்.
இம் மாநாட்டில் பெருத்தொகையான இஸ்லாமிய பெண் சகோதரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
'இஸ்லாமிய அழைப்புப் பணியில் பெண்களின் பங்கு' எனும் தலைப்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி உரையாற்றுவதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் கானலாம்.
Post a Comment