இலங்கை கல்வியியலாளர்களுக்கான நேர்முகப்பரீட்சையால் ஏற்பட்டுள்ள குழப்பம்?
(அனாசமி)
கடந்தாண்டின் இறுதியில் தகுதியுடையோரிடமிருந்து இலங்கை கல்வியலாளர் சேவைக்கான விண்ணப்பம் கல்வியமைச்சினால் கோரப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் தகுதியுடையோர் விண்ணப்பித்திருந்த நிலையில் சிலரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிராகரிக்கப்படாதவர்களின் விண்ணப்பம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் கடந்த 2013.07.25 ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை நேர்முகப்பரீட்சையும் நடைபெற்றது. ஆனால் விண்ணப்பித்தும் நிராகரிக்கப்படாதவர்கள் பலருக்கு நேர்முகப்பரீட்சைக்கான அனுமதிக் கடிதங்கள் கிடைக்காமையினால் விண்ணப்பித்தவர்கள் குழப்பநிலையில் காணப்படுகின்றனர். அவ்வாறெனில் மீதியானவர்களுக்குரிய நேர்முகப்பரீட்சை எப்போது என்பதும் தெரியவில்லை.
இலங்கையின் கல்விக் கல்லூரிகளில், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் கடமையாற்றுவதற்காக இலங்கை கல்வியியலாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இந்தவகையில் மொத்தமாக 273 வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைக்கு அமைவாக வர்த்தமாணி அறிவித்தலுக்கேற்ப விண்ணப்பித்த விண்ணப்பதாரிகள் குழப்பநிலையில் காணப்படுவதால் இதற்கான தெளிவினை கல்வியமைச்சு வழங்கவேண்டுமென விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்கு கடிதம் கிடைக்காதவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment