அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின கண்டனம்
(யு,எல்,எம், றியாஸ்)
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் எப்.எம். முர்த்ளாவின் வீடு 25.07.2013 இரவு 11மனிக்கு தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது
குறித்த பிராந்திய ஊடகவியலாளர் முர்தளாவிடம் இது தொடர்பாக கேட்டபோது தனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லையென்ரு தெரிவித்ததுடன் இத்தாக்குதலுக்கு 25ம். திகதி பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த செய்தியின் தாக்கம் காரணமாகவே அச்செய்தியுடன் தொடர்புடைய சிலர் எனது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிசாருக்கு தெரிவித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திடம் முறையிட்டுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்மேளன நிருவாகிகள் சிலர் இன்று (26) ஊடகவியலாளர் முர்த்தளாவின் வீட்டிற்கு சென்று தாக்குதலுக்குள்ளான வெளிப்புற பிரதேசங்களை பார்வையிட்டதுடன் அக்கரைப்பற்று போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹாஜா முஹிடீனுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதுடன், நிலையப் பொறுப்பு அதிகாரி அவரது அலுவல் காரணமாக குருநாகலைக்கு சென்றிருப்பதால் 27ம்,திகதி அக்கரைப் பற்றிற்கு வந்தவுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதாகவும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா இஸ்ஸதீன் இடம் தெரிவித்துள்ளார்.
முர்தலாவினால் 25ம்,திகதி பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியின் பிரகாரம் வடிகால் அமைப்பு கான்களின் நிர்மானப்பநிகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக பிரதேச மக்கள் அவரிடம் முறையிட்டதை தொடர்ந்து அந்த முறையீடு தொடர்பான செய்தியே நேற்றைய பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
ஏற்கனவே சில இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட வாடி கான்கள் பூரணத்துவம் வாய்ந்தது அல்ல என்ற குற்றச்சாட்டையடுத்து சில இடங்களில் வடிகான்கள் உடைக்கப்பட்டு மீண்டும் புதிதாக வடிகான்கள் அதேஇடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது இது மோசடி நடவடிக்கைகள் ,நிர்மானப்பநிகளில் துஸ்பிரயோகம் , நீண்ட கால பாவனைக்குதவாத கட்டிட நிர்மாணப்பணிகள்,.போன்ற பணிகளை சில கொந்தராத்துகாரர்கள் மேற்கொள்வதனால் அது திடர்பாக பொது மக்கள் தெரிவிக்கின்ற விசனத்தையே சமூகப் பொறுப்புடன் கூடிய ஊடகவியலாளர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவது தமது தார்மீக கடமையாகும்.
ஊடக வியலாளர்களை தாக்கும் முயற்ச்சிகள் , அவர்களது சொத்துக்களை சேதமாக்கும் நடவடிக்கைகள் என்பனவற்றினை அப்மரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் மிக வன்மையாக கண்டிக்கின்றது அத்துடன் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment