‘பேஸ்புக்’ போட்டாவால் கணவன் சந்தேகம் - இளம்பெண் தற்கொலை
பேஸ்புக் போட்டாவை பார்த்து கணவன் சந்தேகம் அடைந்ததால், விரக்தி அடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடுத்த பாலவாக்கம் கோலவிழி அம்மன் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (28). பி.டெக் முடித்துள்ள இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். மனைவி அனு (23), கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக வேலை பார்க்கிறார். திருமணமாகி 45 நாட்கள் ஆகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனுவின் பேஸ்புக்கை ரமேஷ்பாபு பார்த்துள்ளார். அதில், ஒரு வாலிபருடன் அனு இருக்கும் போட்டோ இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ரமேஷ்பாபு, அதுபற்றி அனுவிடம் விசாரித்தார். ‘என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர், எனது நண்பர்’ என அனு கூறியுள்ளார். சந்தேகம் தீரவில்லை. உடனே தனது அம்மா ஸ்ரீதேவி மற்றும் உறவினர்களிடம் ரமேஷ்பாபு கூறியுள்ளார். அவர்களும் விசாரிக்க அனு மனம் உடைந்தார்.
தகராறு வலுத்ததால் ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அனுவின் தாத்தா வீட்டில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு வீட்டாரும் இதில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னரும் ரமேஷ்பாபுவுக்கு சந்தேகம் தீரவில்லை. இதனால் மனம் உடைந்த அனு, நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து ஆவடி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 45 நாட்கள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
girls edukku fb??
ReplyDeleteHa ha ha Well done
ReplyDeleteMy life also like a same this facebook history. my marriage life is only 3 months because former lover`s photograph. my husband divorced and married another girl. so girls careful, don`t wast your life with boys and if you loved anyone you must marry him otherwise you will face big trouble after marriage life.
ReplyDeleteBoys can go anywhere with anyone but nobody cant take action to that but girls cant do any miner mistake also.
this is judgement of this world
Ha ha Well done
ReplyDelete