மஹியங்கனையிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தொடர்ந்தும் நெருக்கடி..!
மஹியங்கனையில் அச்சுறுத்தையடுத்து பள்ளிவாசல் மூடப்பட்டுள்ள போதிலும் அங்குள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், அவர்கள் மஹியங்களையை விட்டு வெளியேற வேண்டுமென அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும் அறியவருகிறது.
மஹியங்கனை முஸ்லிம் வர்த்தகர்கள் தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்திற்கும் கொண்டுவந்தள்ளனர்.
மஹியங்கனையில் 66 கடைகளை முஸ்லிம்கள் நடாத்தி வருகின்றனர். இவற்றில் 6 கடைகள் முஸ்லிம்களுக்கு செர்நதமானவை. ஏனைய கடைகளுக்கு முஸ்லிம்களினால் உரியமுறையில் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.
சொந்த கடைகளை சிங்களவர்களிடமிருந்து பெற்றவர்களுக்கு அந்த கடைகளை மீறப்பெறுமாறும், முஸ்லிம்களுக்கு கடைகளை வாடகைக்கு வழங்குவோர் எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு வழங்கக் கூடாதென அழுத்தம் பிரயோகிகப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மஹியங்கனையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் வியாபாரிகள் மனச்சோர்வு அடைந்துள்ளதாகவும் அரசியல் பிரமகர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு வேன்டுகோள்: மஹியஙகண் முஸ்லீம்கள் பொறுமையுடன் இருங்கள். இந்த நாட்டின் முஸ்லீம் சமூகம் உங்களுடன் இருக்கிறது, அதைவிட வல்ல அல்லஹ் உங்களுடன் இருக்கிறான். பொ.ப.சே. இன்னும் நெருக்கத்தான் போகிறது. ஜனாதிபதி தேர்தல் வரும்வரை இப்படித்தான் இருக்கும். ஒரு ஆலோசனை. முடியுமான முஸ்லீம்கள் தங்கள் வியாபாரத்தை பங்கரகம்மான கிராமத்துக்கு கொன்டுசென்று அந்த கிராமத்தை பலமுள்ள முஸ்லீம் வியாபார மத்திய ஸ்தானமாக்க நாட்டின் சகல சமூக அபிவிருத்தி ஆர்வலர்கள் சிந்தித்தால் என்ன? எமக்குரிய றிஸ்க் எப்போதோ அளக்கப்பட்டுவிட்டதை நம்புகின்ற நாம் எங்கு வியாபாரம் செய்தால் என்ன? ஆரம்பத்தில் சிறிய இலாபத்துக்கு புதிய இடத்தில் ஆரம்ப்பிக்கலாம். மக்களை கவரலாம். முக்கிய விடயம் என்னவென்றால் சிறிய குழுவினராக எமது மக்கள் வாழும் இடங்களை உடனடியாக நாம் முயட்சி செய்து வியாபார அபிவிருத்தி, தொழில் முயட்சிகள், கட்டா நிர்மானம், குடும்ப விருத்தி போன்றவை உதவ முன்வரவேன்டும். முதலில் பங்கரகம்மான் இல் இருந்து ஆரம்ப்பிப்போம், இந்த ரமழான் சதகா ஸகாத்களை அங்குள்ளவர்களுக்கு இப்படியானமுயட்சிகளுக்கு உடன் உதவுவோம். மசூறா சபை, முஸ்லீம் கவுன்சில், முஸ்லீம் மீடியா போறம் இது பற்றி உடன் சிந்திக்கவும்,
ReplyDelete