எப்போது மாறுமோ நம் சமுதாயத்தின் தலைவிதி...?
இன்று றமழான் பிறை 18............
றமழான் முதல் பிறையிலிருந்து பிறை 14 வரை வளர்பிறை
பிறை 14ல் பௌர்ணமி இரவு பூரண சந்திரன் முழுப்பிரகாசத்தோடு காட்சியளிக்கும்.
பிறை 15 முதல் 29 வரை தேய்பிறை. இதுதான் இறைவன் வகுத்த நியதி.
ஆனால்.............
நம்மில் பலருக்கு றமழானில் மூன்று பௌர்ணமிகள்.
றமழான் 1ம் இரவு.
றமழான் 17ம் இரவு.
றமழான் 27ம் இரவு.
றமழான் முதல் நாள் பௌர்ணமியாகவே ஆம்பிக்கும். பள்ளிகள் நியை மக்கள் கூட்டம் அலைமோதும். பிறை 16வரை தேய்பிறை
திடீரென பிறை 17ல் இன்னொரு பௌர்ணமி பத்ரு யுத்தம் நடந்த நாள் என்ற பெயரில் பள்ளிகள் நிறைந்து பெரும் கலகலப்பாக இருக்கும்.
பிறை 18ல் முதல் மீண்டும் தேய்பிறை.
பிறை 27ல் மீண்டும் தோன்றும் பௌர்ணமி. அந்தப் பௌர்ணமிக்கு பெயர் லைலதுல் கத்ர். பள்ளிப்பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்களெல்லாம் பள்ளி நிறைய காணப்படுவார்கள்.
சிலர் நல்ல? பயான் கேட்க வருவார்கள்.
நல்ல பிரியாணி எந்த பள்ளியில் சமைக்கிறார்கள் என்று தேடிவருபவர்கள் சிலர்.
இமாம் தௌபா கேட்கும்வரை எந்த அமல்களிலும் கலந்துகொள்ளாமல் பள்ளிவாசல் சுவர்களில் சாய்ந்துகொண்டு ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்து இமாம் என்ன கேட்கிறார் என்று தெரியாமலேயே ஆமீன்கூறி அழுது வடிக்க ஒரு கூட்டம்.
விடிய விடிய விழித்திருந்து 3.00 மணிக்கு சஹர் செய்து விட்டு சுப்ஹுத்தொழாமல் தூங்கி விடும் ஒரு கூட்டம்.
எப்போது மாறுமோ நம் சமுதாயத்தின் தலைவிதி??
மூன்றாவது பௌர்ணமியான "லைலத்துல் கத்ர்" இரவில் பள்ளிவாசலில் நல்லமல்கள் செய்ய இடங்கொடாமல் சட்டவிரோதமாக எருமை மாடுகளை அறுத்து கறியாக்கி சோறாக்கி சாப்பாடு போடும் வழக்கமும் எமது காத்தான்குடியில் நகர சபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளரால் மேற்கொள்ளப்பட்டது.
ReplyDeleteஅதைக்கூட இந்தப் பெரிய காத்தான்குடியில் ஒரு உலமாவும் கண்டிக்கவில்லை.
அவர்களும் சேர்ந்தே சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட எருமை மாட்டிறைச்சி சாப்பாட்டை 27ம் நாள் சஹருக்குச் சாப்பிட்டு நோன்பு பிடித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
maasha allah unmayaana alahaana thahawal.
ReplyDeleteஇது விதி அல்ல. இஸ்லாமிய நடைமுறைகளை மனம்போனபடி பின்பற்றும் முட்டாள்களின் செயல். ”இவர்கள்தான் தங்களது மனோ இச்சையை கடவுளாக ஆக்கிக்கொண்டவர்கள்“ இது இறைவணின் வாக்கு.
ReplyDelete