Header Ads



'தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியது பெரும் துரோகம்'

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும் என்று யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியிலில் வாக்குரிமை இல்லாத யாழ்ப்பாணத்தை சேர்ந்த அய்யூப் அஸ்மின் என்பவர் இடம் பெற்றுள்ளதானது மன்னாரில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களின் உச்ச கட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தமது கட்டுப்பாட்டுக்குள் ஒரு முஸ்லிமை வைத்துக் கொண்டு இன்னும் அந்த சமூகத்திற்கு எதிரான உள்விவகாரங்களை அறிந்து செயற்பட வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதை தெளிவாக வெளிக்காட்டுவதாக அஸ்கர் ரூமி மேலும் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான இயக்கம் என்ற ஒரு அமைப்பின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மட்டும் போடப்பட்டிருப்பதன் பின்னணி, முஸ்லிம்களை பிளவுபடுத்த கையாண்டுள்ள தந்திரோபாயம் என்பது தெளிவாகின்றது.

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேறவருகின்ற போது, அவர்களை வெளிமாவட்ட முஸ்லிம்களாக காண்பித்து சிங்கள பௌத்த இனவாதிகளை விடவும் படுமோசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்தவொரு முஸ்லிமையும் பெற்றுக் கொள்ள முடியாத வங்குரோத்து  நிலையில் யாழில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வேட்பாளராக அஸ்மின் நிறுத்தியிருப்பதன் பின்னணி தெளிவாகின்றது.

கடந்த 20 வருடமாக பயங்கரவாதம், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு செய்த துரோகமும் அநியாயமும் அழியாத வடுக்கலாக இருக்கின்ற நிலையில் வேட்பாளர் அஸ்மினும் இந்த முஸ்லிம் சமூகத்தற்கு எதிரான கொள்கைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது கவலைத்தருவதாகவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.

சமூக சேவையென்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட அய்யூப் அஸ்மியை யாழ் மக்கள் ஏற்கனவே நிராகரித்துவட்ட நிலையில்,வட மாகாண முஸ்லிம்களுக்கும்,சகோதர தமிழ் மக்களுக்கு அளப்பரிய பணியாற்றிவரும் எமது கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவரும் விசமத்தனமான பிராசாரங்களை செய்துவரும் நிலையில் அதற்கு துணையாக முஸ்லிம் ஒருவரை பயன்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வகுத்த வலையில் அய்யூப் அஸ்மின்  விழுந்துள்ளார். 

மன்னார் மாவட்ட மக்கள் அவரது சுய விபரங்களையும் பின்னணியினையும் அறிந்து கொள்ள ஒரு சந்தரப்பம் ஏற்படடுள்ளது என்று தெரிவித்துள்ள யாழ் மாநாகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி, இவரது பெயரை சிபாரிசு செய்துள்ள நல்லாட்சிக்கான இயக்கம் என்பது கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

10 comments:

  1. முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியதற்காக தமிழ் கூட்டமைப்புக்கு எமது நன்றிகள்

    ReplyDelete
  2. idu jananayaha naadu. sontha karuthukkali samuhathirtku vitka veandaam.ellorudaya pinnaniym nalla pinnanithan. noanpukalathil alanthu arikkai vedavum.

    ReplyDelete
  3. உண்மைதான் வட மாகாண முஸ்லிம்களுக்கும் சகோதர தமிழ் மக்களுக்கும் நிறையவே ரிசாத் சேவை செய்கிறார் ...அதை சீரணிக்க முடியாமல் மு,கா.வேட்பாளர்களை நியமித்துள்ளதே இதற்கு என்ன சொல்லலாம் காட்டிகொடுப்பா, கழுத்தறுப்பா அதையும்விட இழிவான நீசத்துடன் கூடிய துரோகம் இல்லையா ????

    ReplyDelete
  4. Kadisihalam kalil seruppu ilathawarhal elaam adchil irupparhal

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வேட்பு மனுத் தாக்கலாயிட்டில்லே.. தொடங்கிட்டாங்கய்யா.. இனித் தொடங்கிட்டாங்க!

    இனவாத சாக்கடையை இன்னமும் நமது சமூகத்தின் தலைமேல் கொட்டி தங்களின் பதவிக் கதிரைகளை ஸ்திரப்படுத்திக் கொள்ள இவங்கெல்லாம் இப்படியும் பேசுவாங்க.. இதுக்கு மேலயும் பேசுவாங்க!

    இவங்க சொல்ற படி பார்த்தா எப்போதுமே இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் சிங்களவர்களுக்கு கீழேதான் கண்ண மூடிக்கிட்டு மண்டியிட்டுக் கிடக்கணும். தமிழனுக்குப் பக்கத்தில அவன்ட நிழல்லயும் நிக்கப்படாதென்னு தோணுது.

    ஆமா.. யாழ். சோனகன் ஐயுபு அஸ்மிய மன்னாரில் போட்டிருக்கெண்டா, மன்னாரு சோனகர்களுக்கு புத்திமதிகூற இந்த யாழ். சோனக மெம்பருக்கு என்ன தேவை இருக்கு?

    'நான் வடக்கான்' என்டு அவர் சடக்கென்டு பதில் சொல்லுவாரோ..? அப்ப.. இந்த யாழ். சோனகன் ஐயூபு அஸ்மியும் மன்னாரு வழியா வட மாகாண சபைக்குப் போய் 'வடக்கு சோனக சமூகத்தை'ப் பத்தி ஏன் சார் பேச முடியாது?

    ஏன் சார் இன்னமும் இந்த ஊரு வாதமும், தெரு வாதமும், பிரதேச வாதமுமே பேசிப்பேசி அரசியல் வியாபாரம் பண்றீங்க..? அது நல்லாயில்லே.

    கிழக்கில கொழும்பு சோனகன் அஸாத் சாலி வந்து போட்டியிட்டபபோ இஞ்ச யாரும் 'வாக்குரிமையில்லாத கொழும்பான் வந்து வாக்குக் கேக்கான்' என்டு மட்டமா பேசல்ல.

    யாழ். மாவட்டத்தில கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு இடமளிப்பதில் நெருக்கடி இருந்ததால தான் இந்த ஐயூபு அஸ்மி நளீமிய மன்னாரில போட்டாங்க.

    இவர கூட்டமைப்பு பட்டியல்ல போட்டது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யுற துரோகம்னா.. முஸ்லிம் சமூகத்த இன்ட வரைக்கும் சப்பித்துப்பிக்கிட்டே இரிக்கிற சிங்களவங்களோட மட்டும் நம்ம சோனகன் ரோஷமில்லாம பேரு போட்டு சேந்துக்குறது துரோகமில்லயா?

    மக்களுக்கு சேவகம் செய்ய வாறவனுக்கு வாக்குரிமை இருக்கோணும் என்கிறது முக்கியமில்ல சார்.. வாக்குல நேர்ம இருக்கணும். நடத்தயில தர்மம் இருக்கணும். அதான் முதல் தகுதி.

    ஆமா.. நீங்க இன்னமும் கூட்டமைப்பு துரோகம் பண்ணியது.. தமிழன் துரோகம் பண்ணினான் என்டு சொல்லிக்கிட்டே இரிக்கீங்களே.. நம்ம ரிசாத் சார் கட்சியில இரிக்கிற தம்பி கிஸ்புல்லா துரோகம் செய்யல்லியா..?

    அவர் துரோகம் செஞ்சுதான் சார் நாட்டில ஒன்னா இருந்த முஸ்லிம் கட்சி மூனா கெப்புட்டு வளந்திரிக்கி.. அவரு பள்ளியில செய்த சத்தியத்தை மீறி துரோகம் செய்த வரலாறு இருக்கே.. அதத்தான் சார் நாம முஸ்லிம்கள் முதல்ல கண்டிக்கணும்.

    இதெயெல்லாம் உட்டுப்போட்டு இப்ப அரசியலப் பத்திப் பேசுங்க சார். உங்க அரசாங்கம் இன்னா செஞ்சிச்சி..? இனி இன்னா செய்யும்...? யாழ்ப்பாணத்துக்கு எப்ப பல சேனா வரும்..? எப்ப சோனக தெரு பள்ளிக்க பண்டிட ரெத்தம் ஊத்துவான்..? எப்பிடி அத நாங்க தடுப்பம்.. போராடுவம்.. அப்படி இப்பிடி என்டு அரசியல் பேசுங்க சார்..!

    சும்மா அவனுக்கு வாக்குரிமையில்.. இவன் கள்ளத்தோணி என்டெல்லாம் றீல் உடாதீங்க.. நம்ம சனங்களும் கொஞ்சமென்டாலும் விழிப்படைஞ்சி இருக்கு என்கிறத புரிஞ்சிக்கோங்க..!

    கூட்டமைப்புத்தான் இந்த ஐயூபு ஆசாமிய இழுத்துப் போட்டு நம்ம சோனக சமூகத்துக்கு துரோகம் பண்ண திட்டமிட்டிருந்தாலும், இந்தாளு என்ன வாய்க்க விரலக் கொடுத்தா கடிக்கத் தெரியாத பபாவா சார்?

    ஒரு நளீமி இல்ல? ஓதிப்படிச்ச மனிசனில்ல..? அவருக்கும் சொந்தமா ஒரு மூள இரிக்கெல்ல..? ஏதோ அவங்க தூக்கிப் போட்டாங்க.. இவரு துரோகத்துக்குப் பலியாகிட்டாரெண்டு இந்தக்கத்தல் கத்துறீங்களே.. கேட்கச் சகிக்கல்ல.!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  7. @ vaarauraikal

    நான் சொல்ல நினச்சத நீங்க சொன்னீங்க ... யாழ் முஸ்லிம்களுடைய கவலையான விடயம் என்ன எண்டு சொன்ன இந்த ரூமி எல்லாம் அரசியல்வாதியம் ..... சிங்களவன் அடிக்க அடிக்க எங்கட ரிஷாத் ஓட்டிட்டு இரிக்கிறார் இது விளங்காது போல ... இவங்கல்லாம் வாய பொத்திட்டு இருந்தாலே பாதி பிரச்சன தீரும் ....

    ReplyDelete
  8. நன்றி Fanas Fawsi அவர்களே!

    நான் இன்னொன்றையும் எனது கருத்தில் பதிவு செய்யத் தவறிவிட்டேன்.

    கூட்டமைப்புக்காரங்களே தங்களுக்கு ஒரு இடம் கிடைக்கல்லை என ஆதங்கமும், ஆத்திரமும் பட்டுக்கொண்டிருக்கேக்க முஸ்லிம் ஒராளுக்கு கூட்டமைப்பு இடம் கொடுத்ததே அவங்கட நல்லெண்ணத்தக் காட்டுற பெரிய விஷயம்.

    'இல்ல தம்பிமாரே.. உங்களுக்குத்தான் நாட்டில மூணு கட்சி சொந்தமா இருக்குதே.. அதுக்குள்ள நீங்க போயி உங்கட அரசியல் உரிமகளப் பெத்துக்குங்க' என்டு ஒரு வார்த்த சொல்லி அனுப்பியிருந்தா.. அவங்களுக்கு என்ன நஷ்டம் வந்துடப் போகிறது?

    இன்னொரு தமிழனுக்கு இடம் கொடுத்து அவங்க வாக்கு வங்கிய ஸ்ரோங் பண்ணியிருக்கலாமில்லே..?

    என்னப் பொறுத்த வரைக்கும் ஐயூபு அஸ்மி நளீமிக்கு கூட்டமைப்பு ஒரு இடம் கொடுத்தது, வடக்கு முஸ்லிம் சமூகத்தோட மாத்திரமல்ல, கிழக்கு முஸ்லிம் சமூகத்தோடயும் தமிழ்ச் சமூகம் எதிர்காலத்தில் மேலும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பரம் புரிந்துணர்வோடும் வாழ்வதற்கும், சிங்களப் பேரின சமூகத்தினால் மறுக்கப்பட்டு வரும் அரசியல் மற்றும் சமூக உரிமைகளையும் கூட்டுச் சேர்ந்து பெறுவதற்காக அடையாளம் காட்டியுள்ள முதல் சிக்னல் என்றுதான் சொல்வேன்.

    இதனை முஸ்லிம் சமூகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்டது என யாழ்ப்பாண மெம்பர் சொல்றதக் காட்டிலும், ஏறாவூரில இருக்கிற கிழக்கு மாகாண சபை மெம்பர் சுபைர் சாரோ.. ஓட்டமாவடியில இருக்கிற அமீரலி சாரோ.. எங்க காத்தான்குடிக்கு வந்து ஒரு பப்ளிக் மீட்டிங்ல தெளிவா எடுத்துச் சொன்னாங்களென்டா.. நாங்க அவங்கள துரோகிகளாக ஏத்து தூக்கி எறிஞ்சுடறோம்.

    நல்லாட்சிக்காரங்களுடைய கொள்கையென்ன, கோட்பாடு என்ன, அவங்கட அரசியல் இலக்கு என்ன? இலட்சியம் என்ன என்கிறதெயெல்லாம் எட்டு வருஷமா நாங்க கரைச்சுக் குடிச்சிருக்கம்.

    அவங்களாலதான் இப்ப எங்க ஊரில இருக்கிற அரசியல் யாவாரிமார கொஞ்சமென்டாலும் நேர்மையா அவங்கட யாவாரத்தைச் செய்ய வழிக்கு கொண்டு வர ஏலும் என்டு இப்ப கிழக்கு மாகாண முஸ்லிம்களும் ஏத்துக்கிட்டிருக்காங்க.

    ஆகவே, மெம்பரே.. நீங்க நல்லாட்சி என்னடா என்னா.. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்டா என்னா என்டெல்லாம் முழுசாத் தெரிஞ்சிக்காம சும்மா அரை குறை வரலாத்தக் கேட்டுப்போட்டு இன்னமும் அவங்களத் துரொகி.. துப்பட்டி என்டெல்லாம் சொல்ல வராதேங்கோ என்டும் கேட்டுக்கிறன்.


    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி

    ReplyDelete
  9. “நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாவிட்டால் அல்லாஹ் உங்களை நீக்கிவிட்டு வேறொரு சமூகத்தைக் கொண்டு வருவான். அவர்கள் உங்களைப்போல் இருக்கமாட்டார்கள்” எனும் நபிமொழி அஸ்க்கர் ரூமி அவர்களுக்கும் நமது பாரம்பரிய அரசியல் “போராளிகளுக்கும்” பொருந்துமோ! அதற்கான காலம் மலர்ந்திருக்கின்றதோ!

    ReplyDelete
  10. இலங்கையின் பேரினவாதத் தீவிரவாதம் இன்னுமொரு இனச்சுத்திகரிப்பை நாடு முழுவதும் வாழும் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்வதற்கான முஸ்தீபுகளை திட்டமிடுவதாகவே அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவிரோத செயற்பாடுகள் கட்டியம் காட்டுகின்றன. ஆனால் இப்பிரச்சனைகளுக்கு இராஜதந்திர முறையில் அரசியல் தீர்வு காணவேண்டிய இலங்கை முஸ்லிம் அரசியல் செயலிழந்து அரசாங்கத்தின் சதிவலையில் சிக்குண்டு சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


    முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத நடவடிக்கைகள் பேரினவாத பயங்கரவாதிகளால் பகிரங்கமாகவே நடைபெறுகின்ற ‌வேளையில் அவர்களோடு ஒட்டி உறவாடும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் (என்று சொல்பவர்கள்) தமது கையாலாகத் தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றார்கள். கொள்கை அரசியலில் நிலைத்திருக்கின்ற தமிழ் அரசியல் தலைமைத்துவத்துடன் ஆகக்குறைந்தது, பலமான அரசியல் இராஜதந்திர உறவுகளைத்தானும் பேணுவதனுாடாக சிறுபான்மையின் பலத்தை வெளிக்காட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அவர்கள் அக்கரை செலுத்துவதாகத் தெரியவில்லை, மாற்றமாக தமது வியாபார அரசியலை மையப்படுத்தி பல சாதனைகளைக் கண்டிருக்கின்றார்கள். கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியமைக்கும் அதிகாரம் கைகளில் கிடைத்த போது அது மிகத் தெளிவாகவே வெளிப்பட்டது. ஏனைய எச்ச சொச்ச முஸ்லிம் அரசியல் அதிகாரங்களும் அரசாங்கத்துடன் மண்டியிட்டுவிட்டு, பிரச்சினைகளின் போது வெத்து அறிக்கைகளாலும், வீராப்பு பேச்சுக்காலும் ஊடகங்களை அலங்கரித்ததை தவிர உருப்படியாக எதனையும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக பெற்றுக் கொடுத்தது கிடையாது. ‌


    இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வருகின்ற போது இலங்கை முஸ்லிம்களை மறந்துவிட்டதான ஒரு தீர்வு செல்லுபடியற்றதாகும். ஏனெனில் கடந்த யுத்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு அடுத்தபடியாக கனிசமான உயிர் உடமை சேதங்களுக்குள்ளாக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவேதான் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படுகின்ற போது அங்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான தீர்வுகளும் வழங்கப்படவேண்டும். அதற்கு தமிழ் தரப்பு அரசியல் தலைமைத்துவத்துடனான அரசியல் இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தப்படவேண்டும். இதனுாடாகவே பன்மைத்துவ சமூகத்தில் இன ஐக்கியமும், ஒற்றுமையும் கட்டமைக்கப்பட்டு நல்லாட்சியை உருவாக்க முடியும்.


    இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கியிருக்கின்ற வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பது மிக முக்கியமானதொன்றாகும். வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த நிலங்களில் குடியேறி நிம்மதியாக வாழ்வதற்கும், அவர்களுக்கான காணி, தொழில்வசதிகள் போன்ற இன்னோரன்ன வாழ்வாதார வசதிகளை உரிய முறையில் வழங்குவதற்கும் அங்கு அமையவிருக்கும் மகாணசபை ஆட்சியும் அதன் நிருவாகக்கட்டமைப்பும் பெரிதும் தாக்கம் செலுத்துவதாக அமையப் போகின்றது.


    ஆக, வடக்கு மாகாணசபை ஆட்சியை அமைக்கூடியதாக நம்பப்படுகின்ற கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தி எதிர்காலத்தில் தமிழ் அரசியல் தலைமைத்துவத்துடன் சுமுகமான நல்லுறவுகளை வளர்த்துக்கொண்டு தமிழ் மக்களுடன் இரண்டரக் கலந்து வடக்கு கிழக்கில் கனிசமான அளவு வாழ்கின்ற முஸ்லிம்களுக்களின் பிரச்சினைகளுக்கும், நாடுமுடுழுவதும் வாழ்கின்ற ஏனைய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு ஆரம்ப கட்ட ‌வேலைத்திட்டமாகவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் ஒன்றிணைந்திருக்கின்ற அரசியல் கூட்டணியின் அரசியல் செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது. அல்ஹம்துலில்லாஹ். அவர்களுடைய துாய எண்ணங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாளிக்கட்டும்.


    தாங்கள்தான் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களை பிரஸ்தாபித்துக்கொள்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான மக்கள் நலன்களை மட்டுமே முன்னிறுத்திய செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு எதிர்ப்புகளைத் தெரிவித்து அல்லது அவர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் ஒத்துழைக்க வேண்டும். பெரும் பெரும் அரசியல் அதிகாரங்களை கைகளில் வைத்துக்கொண்டு உங்களால் செய்ய முடியாதவற்றைத்தான் அரசியல் அதிகாரங்கள் இன்றி சமூக நலன்களை மட்டுமே முன்னிறுத்தி தங்களால் முடியுமான பங்களிப்புகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கீழான அரசியல் கூட்டணி செயற்படுத்துகின்றது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.