Header Ads



ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி - ஜனாதிபதி வாழ்த்து


(L.A.U.L.M.Naleer)

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷைஹ் ரிஸ்வி முப்த்தி அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவராக 4 வது முறையாகவும் எதிர்வரும் 3 வருடங்களுக்காக அவர் தெரிவு செய்யப்பட்டமைக்காகவே ஜனாதிபதி இவ் வாழ்த்தினைத் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்ட  ஜனாதிபதி, இது விடயம் பேசப் பட்டதும் உடனே தொலைபேசி மூலம் ரிஸ்வி முப்த்தியை தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜம்மியத்துல் உலமா சபையின் நிர்வாக குழுவில் கடந்தமுறை பணியாற்றிய பலரே தொடர்ந்தும் புதிய நிர்வாக குழுவிலும் பணியாற்றவுள்ளதாக ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

9 comments:

  1. namma janadhipadi namma loda erukkaru pa

    ReplyDelete
  2. alhamthulillah

    ReplyDelete
  3. பிள்ளயும் தொட்டிலும் ஆட்டுவாவாரு நல்ல எண்னம் இருந்தால்போதும்

    ReplyDelete

Powered by Blogger.